முருங்கைக்காயின் நன்மைகள்: உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது நல்லது. முருங்கை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதற்கு இதுவே காரணம். முருங்கையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் புதைந்துள்ளன. பல தீவிர நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் முருங்கை உதவுகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எளிதில் கிடைக்கும்.
முருங்கைக்காயை உட்கொண்டால் பல வகையான நோய்கள் நம்மிடமிருந்து விலகி இருக்கும். முருங்கையின் நன்மைகள் என்ன, எந்தெந்த நோய்களில் இருந்து உடலை இது பாதுகாக்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புற்றுநோய் அபாயத்தை குறைக்க
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, முருங்கையை உங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவை அதிகரிக்கலாம். வைட்டமின் ஏ, வைட்டமின் சி முதல் பீட்டா கரோட்டின் மற்றும் நியாசிமைசின் போன்ற கூறுகள் முருங்கைக்காயில் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாக ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற்றுநோய் செல்கள் உடலில் வெளிப்படுவதில்லை.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! நீரிழிவு மேலாண்மைக்கு உகந்த பழங்கள்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
முருங்கைக்காயில் மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் ஏராளமாக உள்ளன. அதே சமயம் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. ஃபைபர் உதவியுடன், உடலின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இது உதவுகிறது. இதனுடன், உடல் எடையை கட்டுப்படுத்த முருங்கையை உணவில் தொடர்ந்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
முருங்கைக்காயில் நியாசிமினின் மற்றும் ஐசோதியோசயனேட் போன்ற உயிரியல் கலவைகள் காணப்படுகின்றன. அவற்றின் உதவியுடன், உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் நிவாரணம் காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த
முருங்கைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அவை சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதோடு, தொற்று வேகமாகப் பரவாமல் தடுக்க்கின்றன. முருங்கையை அடிக்கடி உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்: டயட் பிளான் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ