இரத்த அழுத்தத்தை குறைக்க..‘இந்த’ தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்துங்கள்!

உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல உணவுகள் இருக்கின்றன. இதில், சில நோய் பாதிப்புகளை தீர்த்துக்கொள்ள  தனியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது. 

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2024, 01:57 PM IST
  • தனியா, செரிமானத்தை சீர்ப்படுத்தும்
  • இரவு முழுவதும் இதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • இதை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.
இரத்த அழுத்தத்தை குறைக்க..‘இந்த’ தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்துங்கள்! title=

இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மசாலாக்களுள் ஒன்று, தனியா வகை. இதில் தனித்துவமான நன்மைகள் பல நிறைந்துள்ளன. 

தனியாவில் இருக்கும் நன்மைகள்:

ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்த உணவு வகைகளுள் ஒன்ரு, தனியா. இதில் மருத்துவ நன்மைகள் பல நிறைந்துள்ளன. சமையல் சிறக்க, சுவையை கூட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் மசாலா வகை உணவான இது, உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. செரிமானத்தை சரி செய்யவும், கொழுப்பை கரைக்கவும், இரத்த சர்க்கரை அழுத்தத்தை குறைக்கவும் தனியா விதை உதவும். இதனை, கொத்தமல்லி விதை என்றும் கூறுவர். 

மேலும் படிக்க | எவ்வளவு நல்லதா இருந்தாலும் மாதுளையின் மறுபக்கம் கொஞ்சம் பிரச்சனை தான்!

ஊறவைத்த தனியா (கொத்தமல்லி விதை) தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனால், கொத்தமல்லி விதைகளை ஊறவைப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவும். மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் மருத்துவர்களால் கூறப்படுகிறது. இரவு முழுவதும் ஊற வைத்த தனியா தண்ணீரை காலையில் முதல் வேளையாக குடிப்பது குடலுக்கு நன்மை பயக்கும்.  இதனால், உடலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, பொது நல்வாழ்வை மேம்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும்:

தனியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அதன் பாதிபு குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது, உடலில் உள்ள கணைய செல்களை மேம்படுத்தி, நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது, உடலின் மெட்டபாலிச சத்துக்களையும் அதிகரிக்கிறது.

செரிமானத்தை சீர் செய்யும்:

வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்யவும், செரிமானத்தை மேம்படுத்தவும் தனியா தண்ணீர் உதவும். குடல் ஆரோக்கியத்தை சீர்செய்ய, தினமும் காலையில் தனியா தண்ணீரை குடிக்கலாம். நுரையீரலில் சுரக்கும் செரிமான அமிலங்களை இது அதிகம் சுரக்க வைக்கும். 

முடக்கு வாதத்தை தடுக்கலாம்:

முடக்கு வாதத்தை தவிர்க்க, இரவு முழுவதும் தனியா ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் தனியா விதை மூட்டு வீக்கத்தை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் இருக்கும் லினோலிக் ஆசிட், சினோல் ஆசிட் போன்ற அமிலங்கள் இந்த நோய் பாதிப்புகளை தவிர்க்கும். 

இருதய ஆரோக்கியத்திற்கு உதவும்:

தனியா விதைகள் மாரடைப்பை ஏற்படுத்தும் பிளேட்லெட்டை தடுக்க உதவுகின்றதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் கொழுப்பின் அளவைக் குறைத்து உடல் நலனை மேம்படுத்துகிறது. அவை இரத்த அழுத்த மேலாண்மையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் மெட்டபாலிச சத்துக்களை அதிகரிக்கும். 

மேலும் படிக்க | கிட்னி பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News