சுற்றுலா பல வடிவங்களை எடுத்துள்ளது. அதிலும் கொரோனா, கோவிட் என உலகமே சுகாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், 'கோவிட் தடுப்பூசி சுற்றுலாக்கள்' (“vaccine tours”)ஏற்பாடு செய்யும் போக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஆம், இது கற்பனையல்ல, நிஜம் தான்…. தாய்லாந்து நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களும் தடுப்பூசி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கின்றன.
தாய்லாந்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு தாமதமாகும் நிலையில், மக்கள் எப்போது தடுப்பூசி போட்டு, நோயெதிர்ப்பு ஆற்றலை பெறுவது என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தாய்லாந்தின் பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.
Also Read | ஏழு குழந்தைகளை கருதரித்த பெண் பெற்றெடுத்தது 9 குழந்தைகளை!
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா திட்டங்களை "தடுப்பூசி சுற்றுப்பயணங்கள்" என்ற பெயரில் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தடுப்பூசி இயக்கம் மெத்தனமாக இருக்கும் நிலையில், பணம் வைத்திருக்கும் செல்வந்தர்களின் பொறுமை கட்டுப்பாட்டை மீறுகிறது.
பாங்காக்கிலிருந்து ஒரு டூர் ஆபரேட்டர், Unithai Trip. இந்த நிறுவனம், தடுப்பூசி டூர் பேக்கேஜ்களை $2,400 முதல் $6,400 வரை (75,000 baht முதல் 200,000 baht வரை) வழங்குகிறது.
Also Read | கொரோனாவை சமாளிக்க பயிற்சி மருத்துவர்களும் பணியில் ஈடுபடலாம்
இந்த சுற்றுலா திட்டத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வெளிநாடுகளில் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
சான் பிரான்சிஸ்கோ (San Francisco), லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles), நியூயார்க் (New York) என தடுப்பூசி சுற்றுலாவிற்கான விருப்பத் தெரிவுகளும் உள்ளதாக அந்த நிறுவன அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இந்த சுற்றுலா பேக்கேஜின் விலையானது, தடுப்பூசிகள் காலத்தை பொறுத்து மாறுபடும். அமெரிக்காவில், மாடர்னா, ஃபைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் பயன்படுத்த ஒப்புதல் பெற்றுள்ளனர். J&J க்கு ஒரு டோஸ் மட்டுமே போதும். மாடர்னா மற்றும் ஃபைசர் என இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு டோஸ்கள் கொண்டவை. இரு டோஸ்களுக்கும் இடையில் 20 நாட்கள் இடைவெளி தேவை.
90 சதவீதம் பேர் ஃபைசர் தடுப்பூசியை விரும்புகிறார்கள் என்றும், பயணிகள் குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளது என்றும் Unithai Trip நிறுவன உரிமையாளர் கூறினார்.
மற்றொரு பயண நிறுவனமான மை ஜர்னி டிராவல் (My Journey Travel) ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போடுவதற்காக, சான் பிரான்சிஸ்கோவிற்கு 10 நாள் பயணத்தை வழங்குகிறது.
Also Read | மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு RT-PCR தேவையில்லை
சுற்றுலா பயணத் திட்டத்தை அறிவித்த மூன்று நாட்களில் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிற்து. தொற்றுநோயால் தாய்லாந்தின் சுற்றுலாத் துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த தடுப்பூசி சுற்றுப்பயணங்கள் பலருக்கு தேவையான நிவாரணத்தை அளிக்கும்.
மக்கள் அமெரிக்காவிற்குக் வருவதற்கு மருத்துவ சுற்றுலா சரியான காரணியாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கருதுகிறது.
சில நிறுவனங்கள் ஸ்பூட்னிக் வி ஜாப் (Sputnik V jab) தடுப்பூசியை போடுவதற்காக ரஷ்யாவிற்கான சுற்றுலா பயணத் திட்டங்களை வழங்குகின்றன.
தாய்லாந்து தனது தடுப்பூசி இயக்கத்தை ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. உள்ளூரில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி (AstraZeneca vaccine) மருந்துகளைக் கொண்டு தாய்லாந்து மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்.
ALSO READ | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR