உடல் எடையைக் குறைக்க எளிமையான 3 வழிகள்

கட்டுகோப்பான உடல் அமைப்பு வேண்டும் என்றால் இந்த 3 டிப்ஸை நீங்கள் பின்பற்றினால் போதும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2022, 07:52 PM IST
உடல் எடையைக் குறைக்க எளிமையான 3 வழிகள் title=

உங்களுக்கும் கட்டுக்கோப்பான உடல் மற்றும் சரியான எடையுன் இருக்க வேண்டுமா?.  ஆம் என்றால்,  இந்த எளிமையான 3 டிப்ஸ்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த டிப்ஸை ஃபாலோ செய்து விரைவாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி பெறுங்கள். 

பரபரப்பாக செல்லும் வாழ்கையில் அனைவரும் கட்டுக்கோப்பான உடல் மற்றும் சீரான எடையுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் உடல் உபாதைகள் சந்தித்தே ஆக வேண்டும். இது பலருக்கும் தெரியும்.  அவர்களின் ஆசை மற்றும் விருப்பம் எல்லாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என நாள்தோறும் கனவு காண்பார்கள். ஆனால் அவர்களின் ஆசை ஆசையாகவே இருக்கும். 

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

இதனை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என விரும்பினால், மருத்துவர்களின் ஆலோசனையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சரியான கலோரிகளைக் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். காலை விழிப்பது முதல் இரவு உறங்குவது வரை ஒழுக்கமான வாழ்க்கை முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதனை செய்ய தவறும்பட்சத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது.

சத்தான உணவு

ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான முதல் மற்றும் மிக முக்கியமான படி. உடல் எடையை கட்டுப்படுத்த, உணவு நேரத்தை நிர்ணயம் செய்து, அதை தொடர்ந்து பின்பற்றுங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் சரியான நேரத்தில் பசியுடன் இருப்பீர்கள். 

குறைந்த கலோரி உணவு 

நீங்கள் குறைந்த கலோரி உணவு சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். அதனால் எடை அதிகம் அதிகரிக்காது. சாப்பிடும் உணவை கணக்கிட்டு, கலோரி அளவை அறிந்து கொள்ளலாம்.  பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற சத்தான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சத்தான உணவை உண்பதோடு, வழக்கமான உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள். இதைச் செய்வதன் மூலம் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுவது மட்டுமின்றி உடல் எடையும் குறையும். உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி, ஏரோபிக் உடற்பயிற்சி செய்யதாலே நல்ல ரிசல்டை பார்க்கலாம்.

மேலும் படிக்க | அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுதலை பெற இதோ டிப்ஸ்

மன ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியமும் முக்கியமானது. இதற்கு, நீங்கள் உங்கள் வாழ்க்கையை நேர்மறையாக அணுக வேண்டும். முதலில், உங்கள் உடலின் தேவைகளை உணர்ந்து அதனை நிறைவேற்றுங்கள். உடற்பயிற்சி ஆகியவை முதலில் கடினமாக இருந்தாலும், தினமும் செய்யும்போது எளிமையாகிவிடும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News