Corona Diet Plan: சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மீண்டும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. கடந்த முறை பேரழிவை ஏற்படுத்திய கோவிட் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த முறை BF.7 என்று பெயரிடப்பட்டுள்ளது. சீனாவைத் தவிர, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அத்தியாவசிய உணவுகளிலும் கவனம் செலுத்துவது நல்லது.
மேலும் படிக்க | கருவளையங்கள் அழகை கெடுக்கிறதா... மாயமாய் நீக்க ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!
கொரோனா டையட்
1. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே கொரோனா அபாயத்தைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த காலநிலையில் வெல்லம் சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். இது தவிர, நெய்-வெண்ணெய் உடலுக்கும் நன்மை தரும்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அதிமதுரம் கஷாயத்தை உட்கொள்ளுங்கள், ஏனெனில் இந்த கஷாயம் தொண்டை நோய்த்தொற்றைக் குறைக்கும். இது தவிர, துளசி மற்றும் இலவங்கப்பட்டை கஷாயமும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
3. கோவிட்க்கு எதிரான போராட்டத்தில் உலர் பழங்கள் உங்களுக்கு உதவும். இதில் உள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. நீங்கள் தொற்றுநோய்களின் பிடியில் இருந்தால், ராகி கஞ்சி உங்களுக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளித்து செரிமானத்தை மேம்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு மெல்லக் கொல்லும் விஷம்! எச்சரிக்கும் நிபுணர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ