Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்!

Fruits VS Diabetes: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும் சிலர் சில பழங்களை தவிர்க்கலாம்... நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடக் கூடாது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 18, 2022, 09:25 AM IST
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும் சிலர் சில பழங்களை தவிர்க்கலாம்
  • நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடக் கூடாது
  • நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்
Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்! title=

 

நீரிழிவு நோயாளிகளுக்கான பழங்கள்: அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பழங்களை அதன் தன்மைக்கு ஏற்ப சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும் என்பதுபோலவே, எந்த நோய் உள்ளவர்கள், எந்த பழங்களை உண்ணலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்துக் கொண்டால், ஆரோக்கியத்திற்கு பழங்களால் சிக்கல் எதுவும் ஏற்படாது. இல்லையெனில் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். நீரிழிவு நோய்  உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நமது உணவில் சரியானவற்றைச் சேர்த்துக்கொண்டால், சர்க்கரை நோயை சில நாட்களில் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

சில பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், பழங்களில் எந்தப் பழங்களைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் பெரும்பாலானோருக்குக் குழப்பம் இருக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்த எந்தெந்த பழங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் எடை குறைப்பது கடினமாக உள்ளதா? கொய்யாப்பழம் சாப்பிடுங்க போதும்

செர்ரி

கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்று சொல்வது போல, நீரிழிவு போன்ற பெரிய நோயை செர்ரி என்ற சிறிய பழம் கட்டுப்படுத்தும். செர்ரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. செர்ரியின் கிளைசெமிக் குறியீடு 20 மட்டுமே என்பதால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமையான பழம் என்று நம்பப்படுகிறது. செர்ரி பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இனிப்பான இந்தப் பழம், இனிப்பு உண்ணும் ஏகத்தையும் திருப்திப்படுத்துகிறது. நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயங்களைக் குறைக்கிறது.

ஆரஞ்சு

ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆரஞ்சு, மிகக் குறைவான கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்டது, இது சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் நல்ல அளவில் உள்ளது, இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆரஞ்சு நரம்புகளை ஆரோக்கியமாக்கும் வேலையையும் செய்கிறது.

மேலும் படிக்க | Turmeric Alert: சர்வரோக நிவாரணியாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் மஞ்சளும் கெடுதலே

பேரிக்காய்

பேரிக்காயின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. நார்ச்சத்தும் இதில் நல்ல அளவில் உள்ளது, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது உட்பட பல நோய்களுக்கு நன்மை பயக்கும். சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது பேரிக்காய் சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெர்ரி

பெர்ரி சாப்பிடுவது நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். ஸ்ட்ராபெர்ரி சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த செர்ரிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

ஆப்பிள்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உடலின் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்களை சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Women Longevity: மரணத்தைத் தள்ளிப்போட வாய்ப்பு! இது பெண்களுக்கான நீண்ட ஆயுள் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News