சிறுநீரை அடக்குபவரா நீங்கள்? இதை படித்தால் இனி அப்படி செய்ய மாட்டீர்கள்!!

Urine holding side effects: நீங்களும் இப்படி செய்கிறீர்களா? பிசியாக இருக்கும்போது சிறுநீர் கழிப்பதை அடக்கிக்கொள்கிறீர்களா? இது மிகவும் ஆபத்தானது!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2022, 05:04 PM IST
  • சிறுநீரை அடக்குவதால் வரும் பக்க விளைவுகள்.
  • சிறுநீர்ப்பையில் நான்கில் ஒரு பங்கு நிரம்பினால், அது நமது மூளைக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது.
  • சிறுநீரை அடக்குவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சிறுநீரை அடக்குபவரா நீங்கள்? இதை படித்தால் இனி அப்படி செய்ய மாட்டீர்கள்!!  title=

சிறுநீரை அடக்குவதால் வரும் பக்க விளைவுகள்: மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கென ஒரு சிறப்பு செயல்பாடும் உள்ளது. நாம் அடிக்கடி நல்ல உணவு மற்றும் செரிமானத்தைப் பற்றி பேசுகிறோம். ஆனால் அதே வழியில், உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சரியான நேரத்தில் வெளியேற்றுவதும் அவசியமாகும். எனினும், இதைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பொதுவாக, பிஸியான வேலைகளுக்கு மத்தியில் அல்லது அவசரகாலங்களில் சிறுநீர் கழிப்பதை நாம் மறந்துவிடுகிறோம், அல்லது அடக்கிக்கொள்கிறோம். ஆனால் அது உயிருக்கே ஆபத்தாகக்கூடும்!! 

உடலில் உள்ள சிறுநீர்ப்பை சரியான நேரத்தில் காலியாகவில்லை என்றால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வல்லுநர்கள் சிறுநீரை நிறுத்துவது மிகவும் ஆபத்தானது என்று விவரித்துள்ளனர். அதே நேரத்தில் அதனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துரைத்துள்ளனர். சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 

இந்த தவறை கண்டிப்பாக செய்யாதீர்கள்

எந்த சூழ்நிலையிலும் கழிப்பறைக்கு செல்வதில் தாமதம் ஏற்படக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். சில முக்கியமான வேலைகளில் பிஸியாக இருந்தாலும், சிறுநீர் வரும்போது உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் சிறுநீரை அடக்குவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும் போது சிறுநீர் கழிக்காமல் இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என சுகாதார குரு ஸ்டெபானி டெய்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Health Alert: மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் 4 முக்கிய காரணிகள் 

இது குறித்து விரிவான தகவல்களை அளித்த அவர், சிறுநீர் கழிக்காமல் சிறுநீர்ப்பையில் அப்படியே வைத்திருப்பது உடலின் இடுப்புத் தளத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் கட்டுப்படுத்தினால், சிறுநீர்ப்பையின் தசைகள் தேவைப்படும்போது சுருங்கும் திறனை இழக்க நேரிடும். இப்படி நேர்ந்தால், அதன் பின்னர் நீங்கள் விரும்பினாலும் அதை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது. இதன் காரணமாக சிறுநீர்ப்பை முழுவதுமாக திறக்கும் திறனை இழக்கலாம். பல நேரங்களில் சிறுநீர் வருவது போன்ற தீவிர உணர்வு இருந்தாலும், உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் இருக்கும். இதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இதற்கு சிறுநீர் கழிப்பதை அடிக்கடி கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

யுடிஐ தொற்று ஆபத்து

நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீர்ப்பையில் நான்கில் ஒரு பங்கு நிரம்பினால், அது நமது மூளைக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது. இது அந்த நேரத்தில் நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற செய்தியை நமக்கு அளிக்கிறது. சிறுநீரை அதிக நேரம் கழிக்காமல் அப்படியே வைத்திருந்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும். இது யுடிஐ தொற்றுக்கு வழிவகுக்கும். யுடிஐ அதிக சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் அதிக வலியை தாங்க வேண்டியிருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதாலும் அதிக தொற்று ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும். மது அருந்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, அது நமது சிறுநீர்ப்பையையும் சேதப்படுத்தும் என்று நிபுணர் ஸ்டெபானி விளக்குகிறார். ஆகையால், மது அருந்துவதில் கட்டுப்பாடு மிக அவசியம். அதே சமயம், உடலில் இடுப்புத் தளம் வலுவிழந்தால், நாம் மீண்டும் மீண்டும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது, அதை அடக்காமல் உடனடியாக சிறுநீர் கழித்துவிட வேண்டும். 

உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை

வரம்புக்கு மேல் தண்ணீர் குடிப்பதும் நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தினமும் 1.5 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேல் தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டி வரும். நீங்கள் உடற்பயிற்சி செய்தால் அல்லது கோடை காலம் என்றால் இந்த வரம்பு அதிகமாகலாம். ஆனால் வரம்புக்கு மேல் அதிகமாக தண்ணீர் குடிப்பது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். சாதாரணமான விஷயமாக நாம் நினைக்கும் பல விஷயங்கள் நமக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். சிறுநீர் கழிப்பதும் அப்படி ஒரு விஷயம்தான். சிறுநீர் கழிப்பதை அடக்காமல் இதில் சிறப்பு கவனம் செலுத்துவது பல உடல்நலக் குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். 

மேலும் படிக்க | தூங்குவது நல்லதுதான் ஆனாலும் ஆபத்து இருக்கு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News