- வேப்பிலை ஆயுர்வேதத்தில் சர்வரோகநிவாரணி என்று அழைக்கப்படுகிறது, இரவில் தலையில் வேப்பெண்ணெய்யை தேய்த்து வைத்துவிட்டு மறுநாள் காலையில் தலையை அலசிவிட பொடுகுத்தொல்லை குறையும்.
- எலுமிச்சையில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், துத்தநாகம் உள்ளது, ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகுத்தொல்லை சரியாகிவிடும்.
- சோற்றுக்கற்றாழை பொடுகுத்தொல்லைக்கு ஒரு சிறந்த நிவாரணி, இது சொரியாசிஸ் நோயை சரிப்படுத்தவும் உதவுகிறது. இரவு தலையில் சோற்றுக்கற்றாழை ஜெல்லை தேய்த்து மறுநாள் காலையில் தலை குளிக்க பொடுகுத்தொல்லை குறையும்.
மேலும் படிக்க | உடல் பருமன் மள மளவென குறையணுமா... ‘இவற்றை’ வயிறு நிரம்ப சாப்பிடுங்க!
- நெல்லிக்காய் தலையிலுள்ள பொடுகை போக்க உதவுகிறது, இதனுடன் துளசி இலைகளை பவுடராக்கி சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து அதனை தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் தலையை அலச பொடுகுத்தொல்லை நீங்கும்.
- ப்ரிங்கராஜ் ஆயில் தேய்ப்பதால் இளநரை, பொடுகுத்தொல்லை மற்றும் தலையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், இதனால் உங்கள் முடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
- வெந்தயத்தை ஒரு நாள் இரவு ஊறவைத்து அதனை மறுநாள் பேஸ்ட் போல அரைத்து அதனுடன் தயிர், மருதாணி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும்.
- டீ-ட்ரீ எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி குளித்துவர பொடுகுத்தொல்லை நீங்கும்.
- சோடா உப்பு கலந்த நீர் கொண்டு தலை அலசுவதால் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகுத்தொல்லைகள் நீங்கும்.
- 2 அல்லது 3 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு தேய்த்து வர பொடுகுத்தொல்லை நீங்கும்.
மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ