மாத்திரைக்கு மாற்றாகும் 'கருவேப்பிலை'யின் மகத்தான மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை வேண்டாம் என முகத்தை திருப்புபவர்கள், ஒருமுறை அதன் மருத்துவ குணத்தை தெரிந்து கொண்டால் தேடி தேடி சாப்பிடத் தொடங்குவார்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2022, 05:41 PM IST
  • கறிவேப்பிலையின் மருத்தவ நன்மைகள்
  • நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்
  • உடல் எடை குறைக்கவும் உதவுகிறது
மாத்திரைக்கு மாற்றாகும் 'கருவேப்பிலை'யின் மகத்தான மருத்துவ குணங்கள் title=

இந்திய உணவு வகையில் கறிவேப்பிலைக்கு தனி இடம் உண்டு. அன்றாட சமையலில் இடம்பெறும் கறிவேப்பிலையை குறிப்பாக பெரும்பாலான தென்னிந்திய உணவுகளில் காண முடியும். கறிவேப்பிலை உணவின் சுவையை அதிகரிக்கும். சுவையூட்டி என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் பலருக்கும் கருவேப்பிலையின் மகத்தான மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. 

ஆரோக்கியத்தின் பொக்கிஷம்

கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். தினமும் காலையில் 3 முதல் 4 பச்சை இலைகளை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

1. கண்களுக்கு நல்லது

கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம், கண்பார்வையை மேம்படுத்தலாம். இதில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் கண் பிரச்சனை இருப்பவர்களுக்கு, இது ஒரு அருமருந்து.

மேலும் படிக்க | காலையில் இந்த இலையை சாப்பிட்டால் இந்த குறைபாடு நீங்கிவிடும்

2. நீரிழிவு நோய்  

கறிவேப்பிலையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இரத்தச் சர்க்கரைக் குறைவு பண்புகள் இருக்கின்ற. இதனால், நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. செரிமானம் பிரச்சனை நீங்கும்

கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்று உப்புசம் உள்ளிட்ட அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் போக்குகிறது.

4. தொற்று நோய் தடுப்பு

கறிவேப்பிலையில் பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இது பல வகையான தொற்றுநோய்களைத் தடுக்கிறது மற்றும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

5. எடை குறையும்

எத்தில் அசிடேட், மஹானிம்பைன் மற்றும் டிக்ளோரோமீத்தேன் போன்ற சத்துக்கள் இருப்பதால் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. இத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட கறிவேப்பிலையைத் தான் சாப்பிடுவதற்கு பலரும் யோசிக்கின்றனர். 

(பின் குறிப்பு; இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சிறந்தது)

மேலும் படிக்க | Home Remedies for Cholesterol: கொலஸ்ட்ராலை உடனே கரைக்க வீட்டு வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News