மாரடைப்பை ஏற்படுத்தும் கோவிஷீல்டு: பகீர் கிளப்பும் பிரிட்டன் மருத்துவர்

கொரோனா தடுப்பூசியான கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம் என பிரிட்டன் மருத்துவர் எச்சரித்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2023, 03:48 PM IST
 மாரடைப்பை ஏற்படுத்தும் கோவிஷீல்டு: பகீர் கிளப்பும் பிரிட்டன் மருத்துவர் title=

கொரோனா தடுப்பூசி

கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் இந்த தடுப்பூசிகள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த தடுப்பூசி குறித்த ஆய்வறிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

மேலும் படிக்க | பரங்கிக்காய்: பல வித ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷம்

பிரிட்டன் மருத்துவர் எச்சரிக்கை 

சில நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டன. இது குறித்து இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரிட்டன் மருத்துவர் அசீம் மல்ஹோத்திரா இப்போது தெரிவித்திருக்கும் கருத்து பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ள அவர், இந்த தடுப்பூசியால் இதயம், ரத்த நாளங்கள் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனடிப்படையில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் மக்களிடையே அதிகரித்து வருவதாகவும் எச்சரித்துள்ளார். மருந்து நிறுவனங்களை பொறுத்தவரை லாபம் ஈட்டுவதையே குறிகோளாக கொண்டிருக்கின்றன, மக்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் அவர்களுக்கு கிடையாது எனவும் பகீர் கிளப்பும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு ஆபத்தானது

கொரோனா தடுப்பூசிகளின் மாதிரிகள் மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது கோவிஷீல்டு மிகவும் ஆபத்தானவை என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி ரத்த நாளங்களில் குறிப்பிடத்தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதையும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைவிட கோவிஷீல்டு ஆபத்தானவை எனவும் வகைப்படுத்தியுள்ளனர். பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகளை கண்டறிந்தவுடன், அதன் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. ஐரோப்பா முழுவதும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

மேலும் படிக்க | இளவயதில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை, நீரிழிவு நோயாக இருக்கலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News