புதுடெல்லி: COVID-19 மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், மூன்றாவது அலை குறித்து தெரிவித்துள்ளார்
"நாடு முழுவது மூன்றாவது அலை ஏற்படும். ஆனால் அது இரண்டாவது அலை போல தீவிரமானதாக இருக்காது," என்று டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்தார். மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் பல்வேறு காரணங்களையும் பாண்டா சுட்டிக்காட்டினார். முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டால், அது மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும்.
மற்றொரு காரணம் என்னவென்றால், ஒரு COVID-19 வைரஸ் திரிபு, நோய் எதிர்ப்பு சக்தியைத் குறைக்கலாம். அடுத்த அலையை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது விஷயம் என்னவென்றால், புதிய திரிபு நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்காது என்றாலும், அது வேகமாகப் பரவுவதால், அதிகமானோருக்கு தொற்று ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்தார்.
பாண்டா கூறிய கடைசி காரணம் என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மாநிலங்களால் முன்கூட்டியே நீக்கினால், தொற்று நோய் பரவல் அதிகரிக்க அவை வழிவகுக்கும். மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்ப்டலாம் என அவர் மேலும் கூறினார்
எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா வியாழக்கிழமை COVID-19 மூன்றாவது அலைக்கான சாத்தியமான காரணங்களை பட்டியலிட்டட நிலையில், பாண்டாவின் கருத்துக்கள் வந்துள்ளன.
மூன்றாவது அலை குறித்து கருத்து தெரிவித்த AIIMS இயக்குனர் சமூக தூரத்தை பராமரித்தல், முகமூடிகளைப் பயன்படுத்துதல் மற்றும் மக்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற COVID-19 தொற்றை கட்டுப்படுத்தும் நடத்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் மூன்றாவது அலையில் ஏற்படக்கூடிய தொற்று பரவலை மிகவும் குறைக்க முடியும் என்று குலேரியா கூறினார்.
ALSO READ | மக்கள் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - சென்னை மாநகராட்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR