புதுடெல்லி: நோயற்ற வாழ்வு வாழ அனைவருக்கும் ஆசை இருந்தாலும் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதக தரவுகள் கவலை தெரிவிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக வளர்ந்து வரும் இந்த சர்க்கரை நோய் பாதித்தால், ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீர்கெடுகிறது. உடலின் பிற உறுப்புக்களை மிகவும் பாதிக்குக்ம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானது. ஏனென்றால், நீரிழிவு நோயானது, சிறிது சிறிதாக, கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவற்றை பாதிக்கிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
நீரிழிவு நோய் என்ற சவாலை சமாளிக்க, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றன. முருங்கைக்காய் முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, முருங்கை விதை என முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் நீரிழிவு நோயை ஓட ஓட விரட்டும் தன்மை கொண்டவை. சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது. நீரிழிவு நோய் திடீரென அதிகரிப்பதை தடுப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முருங்கை பயன்படுகிறது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!
நீரிழிவு நோய்க்கு முருங்கையை எவ்வாறு பயன்படுத்துவது?
முருங்கை நற்பண்புகளின் சுரங்கம் என்றே சொல்லலாம். முருங்கையில், பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டிவைரல், மன அழுத்தம் மற்றும் அழற்சியைப் போக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. கால்சியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட முருங்கை, ஆரோக்கியத்திற்கு உகந்தது.
நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முருங்கையில் உள்ள குர்செடின், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். அதோடு, முருங்கையில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. முருங்கையை எப்படியெல்லாம், அதாவது எந்தவிதங்களில் பயன்படுத்தினால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்
முருங்கைப் பொடி
முருங்கை இலைகள், விதைகள் மற்றும் பூக்களை உலர வைக்கவும். பிறகு அதன் பொடியாக செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, வேண்டும்போது பயன்படுத்தலாம். இந்த முருங்கைக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் காலை அல்லது தூங்கும் போது வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இது இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.
முருங்கைக்காய் சூப்
முருங்கை இலையை சூப்பாக செய்து குடிக்கலாம். ஆனால் சூப்பாக சாப்பிடுவது கொடுக்கும் பலனை மற்றொரு முருங்கை பானமும் கொடுக்கும். தேநீருக்கு பதிலாக முருங்கை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேனை சேர்த்து அதிகாலையில் குடிப்பதன் மூலம், சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கலாம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலுக்கும் நீரிழிவுக்கும் எமனாகும் கருமிளகு எனும் அருமருந்து
முருங்கைப்பூ
முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். முருங்கைப்பூவில் தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் இருக்கின்றன, இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாகிறது.
முருங்கைக்காய் கசாயம்
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைக்காயின் கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், இந்தக் கஷாயத்தைக் குடிப்பதன் மூலம், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதோடு, வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுக்கெல்லாம் நோ சொல்லிடுங்க!
முருங்கை விதை கசாயம்
முருங்கைகாயில் உள்ள விதைகளை எடுத்து அதை கசாயமாக செய்துக் குடிப்பது இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து கல்லீரலின் நச்சுத்தன்மையைப் போக்க உதவுகிறது. இந்த கசாயம், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. முருங்கைக்காய் இளசாக இருந்தால் அதை சமைத்து சாப்பிடலாம். முருங்கைக்காய் முற்றி விட்டால், அதிலுள்ள விதைகளை எடுத்து இப்படி பயன்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் Vitamin B12 குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ