கெட்ட கொழுப்பை குறைக்கும் ஜெல்: மருந்துகள் மட்டுமல்ல, இந்த சிறப்பு தாவரத்தின் சாறு அதிக கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் திறம்பட செயல்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த இந்த ஸ்பெஷல் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது நாள்பட்ட நோயாகும், இது பல உடல்நலம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது. இன்றைய அவசர காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் காரணமாக, உடலில் கொழுப்பு படியும் சதவிகிதம் அதிகரித்து வருகின்றன, இதனால் மக்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உடலில் கொழுப்பு அதிகமாவதை முற்றிலுமாக கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ சிகிச்சையே கிடையாது.
கெட்ட கொழுப்பை குறைப்பது எப்படி?
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை மருந்துகளின் உதவியுடன் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் உணவு மற்றும் வீட்டு வைத்தியம் மூலமும் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய, சிறப்பு வீட்டு வைத்தியத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | அற்புத மாயங்களை செய்யும் சீத்தாப்பழம்! வாரத்தில் இரண்டு.... இரட்டிப்பு பலன்கள்
கற்றாழை ஜெல்லின் நோய் தீர்க்கும் பண்பு
மருந்துகள் மட்டுமின்றி, கற்றாழை ஜெல்லும் அதிக கொழுப்பு போன்ற நோய்களைக் கையாள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றாழை ஜெல்லை உட்கொள்கின்றனர், அவர்களுக்கும் உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் வேலையை இந்த சுலபமான வழி செய்கிறது.
கற்றாழை ஜெல் உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்பதுடன், அதை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதயம் மற்றும் தமனிகளில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க கற்றாழை ஜெல்லையும் உட்கொள்ளலாம். கற்றாழை ஜெல் கெட்ட கொலஸ்ட்ரால் மட்டுமன்றி ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | சூரியகாந்தி விதையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள்... பெண்களுக்கு மிக அவசியம்!
கற்றாழையின் ஊட்டச்சத்து
கற்றாழையில் உள்ள என்சைம்கள் உணவை உடைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகின்றன. அத்துடன் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாலிசாக்கரைடுகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. பாலிசாக்கரைடுகள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகின்றன. எனவே, கற்றாழை காலையில் வெறும் வயிற்றில் உண்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
காலைவேளையில் கற்றாழை ஜெல்
நீரிழிவு நோயாளிகளைப் போலவே, அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜெல்லை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், காலையில் கற்றாழை ஜெல்லை உணவு உண்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டால், அது வயிற்றில் சிறப்பாகச் செயல்படும். அதோடு, நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் படியாமல் பாதுகாக்கும்.
கற்றாழை உட்கொள்ளும் சரியான வழி
கற்றாழை சாற்றை உட்கொள்ளும் சரியான வழியை நீங்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். முதலில், கற்றாழை செடியிலிருந்து ஒரு துண்டை பறித்து, தோலுரித்து, அதிலிருந்து அனைத்து ஜெல்லையும் நன்கு பிரித்தெடுக்கவும். இப்போது இந்த ஜெல்லை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து, பின்னர் அதை உட்கொள்ளவும். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாக மாற்றி குடிக்கலாம்.
மேலும் படிக்க | அரிசியிலும் கலர் பார்க்கும் சமூகம்! இதிலாவது வெள்ளை மோகத்தை விடுங்கப்பா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ