பல கலாச்சாரங்களின் உணவுகளில் புளித்த உணவுகள் மிகவும் பிரபலமானவை. நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானவை. நொதித்தல் அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நொதித்தல் செயல்முறையின் போது, நுண்ணுயிரிகளால் ஏற்படும் உயிர்வேதியியல் மாற்றங்கள் புளித்த உணவுகளின் ஆரோக்கிய பண்புகளை அதிகரிக்கின்றான. புளித்த உணவுகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. புளித்த உணவுகள் ஆரோக்கியத்தில் எதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புளித்த உணவுகளில் உள்ள நுண்ணுயிரிகளின் சாத்தியமான புரோபயாடிக் விளைவுகள், பயோஆக்டிவ் பெப்டைடுகள் மற்றும் நொதித்தலின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் பயோஜெனிக் அமின்கள், ஃபீனாலிக் கலவைகள் பயோஆக்டிவ் பொருட்களாக மாற்றப்படுகின்றன, மேலும் ஆன்டிநியூட்ரியண்ட்கள் குறைகின்றன. அதுமட்டுமல்ல, வைட்டமின் உள்ளடக்கம் அதிகரிப்பது என பல நன்மைகள் ஏற்படுகின்றன.
மேலும் படிக்க | வயசானாலும் வலிமையும் சுறுசுறுப்பும் மாறாம இருக்க... ‘சில’ புரதம் நிறைந்த உணவுகள்!
, ஆக்ஸிஜனேற்ற, ஆண்டிஹைபர்டென்சிவ் மற்றும் ஆண்டிடியாபெடிக் நடவடிக்கைகள் புளிக்கவைக்கப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையவை. பல்வேறு வகையான புளித்த உணவுகள் மற்றும் முக்கிய உணவு மெட்ரிக்குகளின் நொதித்தல் போது வெளிப்படும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள், குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் ஆக்கப்பூர்வமான மதிப்பு கூடுதலை முன்வைக்கிறது.
பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் புளிக்கவைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், மோர், இட்லி தோசை மாவு, ஊறுகாய், பழைய சாதம் என நமது உணவுடன் பின்னிப்பினைந்தவை.
இதைத்தவிர, ஆல்கஹால் பானங்கள் நொதித்தல் செயல்முறையில் உருவாக்கப்படும் பானம் ஆகும். பல சடங்குகள், மரபுகள், மதங்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு கலாச்சார நடைமுறைகளுடன் ஆல்கஹால் பயன்பாடு இணைக்கப்பட்டுள்ளது. அது கள் இறக்குவதாக இருந்தாலும் சரி, நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பீர் விஸ்கியாக இருந்தாலும் சரி, அனைத்தும் நொதித்தல் முறையில் உருவாக்கப்படுவதனால், குறிப்பிட்ட பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது.
ஆனால் எல்லா பொருட்களும் நொதித்தல் முறையில் ஊட்டச்சத்து அதிகரிக்கூடியவையா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். ஏனென்றால், புளிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் உலர்ந்த அமிலோலிடிக் ஸ்டார்டர்கள் உள்ள பொருட்களைத் தான் நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்த முடியும்.
மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!
காய்கறிகள், பழங்களை நொதித்தல் முறையில் ஊறுகாய் செய்வதால் அதில் லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் அதிகமாகிறது. இந்த அமிலங்கள் குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணியிர்களை வளப்படுத்துகின்றன. ஊறுகாயை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும் என்பதால் தான் நமது தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு ஒரு சிறப்பிடம் உண்டு.
சில ஊறுகாய் வகைகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை கட்டுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல, தயிர், மோர், இட்லி, தோடை, பழங்கஞ்சி என புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்தை அரண் போல காக்கின்றன என்று சொன்னால், அதற்கு எதிர் கேள்வி உண்டா?
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை சட்டுபுட்டுன்னு குறைக்கனுமா? இந்த ‘ஜெல்’ இருக்க கவலை ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ