Health Caution: சுட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் தெரியுமா?

சுட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும், புற்றுநோய் வரலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 22, 2021, 02:23 PM IST
  • சுட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்
  • செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்
  • புற்றுநோய் வரலாம்
Health Caution: சுட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் தெரியுமா? title=

புதுடெல்லி: ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துகிறீர்களா? அது ஏற்படுத்தும் அபாயகரமான விளைவுகளை தெரிந்துக் கொண்டால், இனி மறந்து கூட அந்த தவறை செய்யமாட்டீர்கள்.

சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது நம் எல்லா வீடுகளிலும் தொடரும் பொதுவான விஷயம். சுட்ட எண்ணெயை வீணாக்க விரும்பாததால் நாம் இதைச் செய்கிறோம். பொருட்களை வீணடிக்கக்கூடாது என்ற நம்முடைய இந்த சேமிப்பு ஆசை உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்துக் கொண்டால், இனி மறந்து கூட சுட்ட எண்ணெயை பயன்படுத்தமாட்டீர்கள். 

எண்ணெயை கொதிக்க வைக்குபோது நச்சுகள் வெளியேறும். கொதிக்கும் எண்ணெயில் உணவுப் பொருட்களை பொறித்து எடுத்துவிட்டு ஆற வைத்து விடுகிறோம். அப்போது அந்த எண்ணெயில் நச்சுகள் படிந்திருக்கும். அதை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது, அதில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் உடைந்து போகத்தொடங்கும்.

அதனால், எண்ணெயின் மணம் மாறிப் போகும். இதை நீங்கள் வீட்டிலேயே சோதித்துப் பார்க்கலாம். சுட்ட எண்ணெயின் மணமும் நிறமும், முதல் முறை கடையில் இருந்து வாங்கும் எண்ணெயுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

Read Also | பூவன்பழத்தின் அற்புத நன்மைகள்! யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது தெரியுமா?

அதுமட்டுமல்ல, சுட்ட எண்ணெயால் சமைக்கப்பட்ட உணவுக்கும், புதிதாக பயன்படுத்தப்படும் எண்ணெயில் சமைக்கப்படும் உணவுக்கும் உள்ள சுவையில் வித்தியாசம் இருக்கும். சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது, உணவின் தரம் மற்றும் சுவையை மட்டுப்படுத்துவதோடு, உடலுக்கு தீங்கும் ஏற்படுத்தும்.

பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி சமைத்தால், உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். இதற்குக் காரணம், எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவதன் மூலம், அந்த எண்ணெயில் free radicals வளரத் தொடங்குகின்றன. அதோடு எண்ணெயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்துவிடும்.

இதன் காரணமாக, புற்றுநோய் பாக்டீரியாக்கள் உருவாகின்றன, அவை உணவில் ஒட்டிக்கொள்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், பயன்படுத்திய எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டால், வயிற்றில் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் (stomach cancer, gall bladder cancer, liver cancer) மற்றும் பிற வகையான நோய்கள் வரலாம்.

சுட்ட சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவைப் உண்பதால், அதில் உள்ள கொழுப்பு உடலுக்குள் நுழைகிறது. இதன் காரணமாக இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பொதுவாக சமைக்கும்போது, எண்ணெயை நன்றாக சூடாக்குகிறோம். அப்போது அதில்ல் உள்ள சில கொழுப்புகள் டிரான்ஸ் கொழுப்புகளாக மாற்றப்படுகின்றன.

 Read Also | இதை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்

இந்த டிரான்ஸ் கொழுப்புகள் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளாகும், இவை இதய நோய்களை அதிகரிக்கும். மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் உள்ள டிரான்ஸ் கொழுப்பின் அளவு இன்னும் அதிகமாகிறது. இதன் காரணமாக மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கிறது.

சுட்ட எண்ணெயை மீண்டும் சூடாக்கி உணவை சமைத்து சாப்பிடுவதன் மூலம், நீங்கள் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். இது, அல்சைமர், அசிடிடி மற்றும் பிற தீவிர நோய்களை ஏற்படுத்தும். அதோடு, இவை உடலின் செரிமான அமைப்பை பாதிக்கும். அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது சுட்ட எண்ணெயின் மறுபயன்பாடு.

சுட்ட எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் மூலம், உடல் பருமன் மற்றும் எடை அதிகரிக்கும். சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, முடிந்தவரை ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடாக்கி பயன்படுத்த வேண்டாம்.  

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.  

Read Also | Red banana: செவ்வாழையின் சூப்பர் நன்மைகள்! யார் இதை சாப்பிடக்கூடாது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News