Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். பலர் ஜிம் சென்று நேரம் செலவழித்து உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில இயற்கையான எளிய வழிகளிலும் தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்கலாம். இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைப்பதில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தொப்பையை போக்க, பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது விரைவாக எடையைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, இந்த காய் இன்னும் பல நன்மைகளையும் அளிக்கின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குடைமிளகாய் (Capsicum) அனைவரும் பயன்படுத்தும் ஒரு பிரபலமான காய் ஆகும். இது எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடைமிளகாய் பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் என பல வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த வகைகள் அனைத்தும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. தொப்பை கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் இதை உட்கொண்டால் கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.
குடைமிளகாயை உட்கொள்வது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் மற்றும் எடை இழப்பு உணவுக்கான பயனுள்ள விருப்பங்களைத் தேடுபவர்கள் குடைமிளகாயை பயன்படுத்தலாம்.
கலோரிகளைப் பற்றிய கவலை தீர்ந்தது
உடல் எடையை குறைக்க, நாள் முழுவதும் கலோரிகளை குறைக்க வேண்டும். இதற்காக அதிக கலோரி இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த வழியாக உள்ளது. அதன் உதவியுடன், கலோரிகளை அதிகரிக்காமல் நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்க முடியும்.
மேலும் படிக்க | மொபைல் போன் பயன்படுத்தினால் மூட்டுவலி கேரண்டி! பாதிப்பை தவிர்க்க ‘இதை’ செய்யலாம்
அதிக நார்ச்சத்துள்ள உணவு
குடைமிளகாயில் நார்ச்சத்து (Fiber) நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப வைத்து, விரைவில் பசி எடுக்காமல் வைக்கிறது. இதன் மூலம் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தலாம். இந்த முறை விரைவாக உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வைட்டமின் சி -யின் பொக்கிஷம்
குடைமிளகாயில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனினும், வைட்டமின் சி -யை அதிகமாக வழங்குவதில் இது பிரபலமாக உள்ளது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இது பல அம்சங்களில் உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
குடைமிளகாயில் கேப்சைசின் போன்ற பொருட்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகின்றன. இதன் காரணமாக, கொழுப்பு வேகமாக எரிகிறது, கொழுப்பு சேமிப்பு குறைகிறது. இந்த காரணத்தால்தான் இந்த காய் எடை இழப்பு உணவின் (Weight Loss Diet) இன்றியமையாத பகுதியாக உள்ளது.
குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்
- தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்
- கண்கள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும்
- உடல் நீரேற்றமாக இருக்கும்
- நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்
- வைட்டமின்களுடன், புரதமும் கிடைக்கும்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கும் இந்த உடற்பயிற்சி, இதயத்தையும் பாதுகாக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ