அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

முட்டை சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும், அதேசமயம் முட்டை சாப்பிடுவதால் உங்களுக்கு இதயம் தொடர்புடைய நோய் எதுவும் ஏற்படாது.  

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2023, 06:27 AM IST
  • முட்டையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
  • அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் தமனிகளுக்கு சேதம் ஏற்படும்.
  • இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா? title=

பொதுவாக முட்டைகள் ஒரு ருசியான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருளாகும், எளிதில் கிடைத்துவிடக்கூடிய மற்றும் விலை மலிவான முட்டையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இருப்பினும், முட்டைகளில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இது உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று நீண்ட நாட்களாகவே சில கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.  இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்கிற யோசனை பலருக்கும் ஏற்படும்.  அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் பெருந்தமனி தடிப்பு அல்லது தமனிகளுக்கு சேதம் ஏற்படும், மேலும் இது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், முட்டை பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.  ஒரு முட்டையில் 7 கிராம் புரதம், வைட்டமின் டி, கோலின் மற்றும் லுடீன் ஆகியவை நிறைந்துள்ளது.  பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு கோலின் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், அதேபோல லுடீன் கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். உண்மையில் சுமார் 80% கொலஸ்ட்ரால் உங்கள் உடலால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் கொலஸ்ட்ராலுக்கு உணவை தவிர மரபியலும் மற்றொரு முக்கியமான காரணியாக அமைகிறது.  

மேலும் படிக்க | உடல் எடை கட்டுக்கடங்காமல் ஏறுதா? இவற்றை பயன்படுத்தினால் சட்டுனு குறையும் 

நமது உடலுக்கு பெரும்பாலும் ஆபத்தை ஏற்படுத்துவது எல்டிஎல் எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் தான், இது பொதுவாக கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது.  இந்த கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது தமனி சுவர்களில் குவிந்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.  ஹெச்டிஎல் எனப்படும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் ஆனது நல்ல கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது.  முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று எந்த ஆய்வுகளும் நிரூபிக்கப்படவில்லை.  2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுகளில், பெரும்பாலான மக்களுக்கு முட்டை உட்கொள்ளல் கொலஸ்ட்ராலில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகளவு கொலஸ்ட்ரால் உடையவர்கள் முட்டையை சாப்பிடும்போது அவர்களுக்கு எல்.டி.எல் மற்றும் ஹெச்.டி.எல் ஆகியவற்றின் விகிதம் அதிகரிக்கிறது.  

முட்டை சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும், அதேசமயம் முட்டை சாப்பிடுவதால் உங்களுக்கு இதயம் தொடர்புடைய நோய் எதுவும் ஏற்படாது.  முட்டையில் உள்ள பெரும்பாலான கொலஸ்ட்ரால் மஞ்சள் கருவில் தான் உள்ளது, எனவே கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தவிர்க்க நீங்கள் முழு முட்டையை சாப்பிடுவதற்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் தவிர, கரையக்கூடிய வைட்டமின்கள் , கோலின் மற்றும் லுடீன் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.  முழு முட்டை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.  ஒரு நாளைக்கு 300 மில்லிகிராமுக்கு குறைவாக கொழுப்பை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தும் பிரியாணி இலை! பயன்படுத்துவது எப்படி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News