நீரிழிவு நோயில் ஆரஞ்சு சாப்பிடலாமா: நீரிழிவு நோயால், உடலில் பல வகையான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சரியான உணவை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவை பெருமளவு கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சப்பிடலாம் என்பதிலும் குழப்பம் உள்ளது. குறிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகமாகுமா, குறையுமா என்ற கேள்வி சர்க்கரை நோயாளிகளின் மனதில் இருக்கும். இதைப் பற்றி சுகாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரஞ்சு ஆரோக்கியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அனுகூலமானதாக இருக்கும்.
நார்ச்சத்து அதிகம்
ஆரஞ்சில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நல்லதாக கருதப்படுகிறது. இது தவிர நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். ஒரு நடுத்தர அளவிலான ஆரஞ்சிலிருந்து சுமார் 5 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது.
மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்!!
குறைந்த கிளைசெமிக் குறியீடு
ஆரஞ்சு பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. பெரும்பாலான வல்லுநர்கள் நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் இரத்த சர்க்கரையை வேகமாக கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
ஆரஞ்சு பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது. இதன் நுகர்வு உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும்.
வைட்டமின் சி இன் நல்ல ஆதாரம்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நோய் எதிர்பு சக்தி அதிகரிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது. ஆரஞ்சு பழத்தை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலுக்கு 91 சதவீதம் வைட்டமின் சி கிடைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ