Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

இன்றைய போட்டி நிறைந்த உலகில் கவனம் சிறிது விலகினாலும், நம்மை வீழ்த்திவிட்டு, பலர் முன்னேறி சென்று விடுவார்கள். ஆகவே நமது மூளையை எப்போது சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2022, 06:36 PM IST
  • மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும்.
  • காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் மூளையை பாதிக்கும் ஒரு ஆபத்தான பழக்கம்.
Brain Health: மூளையை பாதிக்கும்  ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க title=

நமது உடலை கட்டுப்படுத்தும் மூளை, கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் எந்த வேலையையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். கூர்மையான மூளை உள்ளவர்களால் தான்,  உலகில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முடியும். ஆனால் சில பழக்கங்கள் உங்கள்  மூளையை, அதன் செயல் திறனை பெரிதும் பாதிக்கும்.  மூளையின் செயல் திறனை பாதிக்கும் பழக்கங்களால், மூளை மந்தமாகிறது. போட்டி நிறைந்த உலகில் கவனம் சிறிது விலகினாலும், நம்மை வீழ்த்திவிட்டு, பலர் முன்னேறி சென்று விடுவார்கள். ஆகவே நமது மூளையை எப்போது சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் மூளை எப்போதும் ஜெட் வேகத்தில் இயங்க வேண்டும் என விரும்பினால், மூளை பாதிக்கும் கெட்ட பழக்கங்களை நிச்சயம் கை விட வேண்டும். பின்வரும் பழக்கங்கள், மூளையின் செயல் திறனை பாதிக்கிறது என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1. காலை உணவை தவிர்த்தல்

காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் மூளையை பாதிக்கும் ஒரு ஆபத்தான பழக்கம். ஏனெனில், இதன் காரணமாக மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் நாள் முழுவதும் மந்தமாக செயல்படும். 

மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

2. கோபம்

சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சி வசப்பட்டு அதிகம் கோபப்பட்டால், அது உங்கள் மூளையும் வேலை செய்ய இயலாமல் முடக்கிவிடும்.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என கூறுவது இதனால் தான். ஏனெனில், கோபம் உங்கள் மூளையின் இரத்த தமனிகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் செயல் திறனை பாதிக்கிறது. இது மூளை யோசிக்கும் திறனை இழக்கிறது.

3. தூக்கமின்மை

தூக்கமின்மை, அல்லது குறைவான தூக்கம் உங்கள் மூளையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். தூக்கமின்மையால், மூளை செல்கள் ஓய்வெடுக்க முடியாமல் சோர்வடையும். அதே சமயம் முகத்தை  மூடிக்கொண்டு தூங்கினால், உறங்கும் போது உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது மூளையை தளர்வடைய செய்யும்.

4. அதிக  அளவில் சர்க்கரை சாப்பிடுவது

உடலில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரையானது மூளையின் அறிவாற்றல் திறனை மிக மோசமாக பாதிக்கிறது என்று பல்வேறு நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் நினைவாற்றலும் குறையத் தொடங்குகிறது. அதனால், மூளை மந்தமாகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News