Black Hair Tips: வெளுத்த நரைமுடியை கருமையாக்க சுலபமான குறிப்புகள்

வெள்ளை முடியை இயற்கை முறைகளால் கருப்பாக மாற்றலாம். முடியை எப்படி கருமையாக்குவது என்று தெரிந்து கொள்வோம்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2021, 06:04 PM IST
  • நரைமுடியை கருமையாக்க குறிப்புகள்
  • சுலபமாக வீட்டிலேயே செய்துக் கொள்ளலாம்
  • இயற்கை முறையில் முடியை கருமையாக்கலாம்
Black Hair Tips: வெளுத்த நரைமுடியை கருமையாக்க சுலபமான குறிப்புகள் title=

பொதுவாகவே இந்தியர்களுக்கு நீள முடி பிடிக்கும், நரைமுடி பிடிக்காது. அதிலும் தற்போது, சிறுவயதிலேயே இளநரை வந்து வயதான தோற்றத்தைத் தந்துவிடும்.  
முகத்தின் அழகில் நம் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால்தான் தங்கள் வெள்ளை முடியை கருமையாக்க ஹேர் டை (Hari Dye) பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஹேர் டை உங்கள் முடியையும் சேதப்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் வெள்ளை முடியை இயற்கை முறைகளால் கருப்பாக மாற்றலாம். முடியை எப்படி கருமையாக்குவது என்று தெரிந்து கொள்வோம்.

இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பு நிறமாக மாற்ற, உங்களுக்கு பயனுள்ள ஹேர் மாஸ்குகள் இவை. இந்த ஹேர் மாஸ்குகள் ஒருசில மாதங்களில் உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும், எனவே நீங்கள் பக்கவிளைவுகளைத் தரும் ஹேர் டை (Hair Dye) பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

Also Read | பாலியல் ஆரோக்கியத்திற்கு சமையலறையின் இந்த ‘5’ மசாலாக்கள் போதும்..!

வாழைப்பழம் மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
ஒரு வாழைப்பழத்தை பிசைந்து, அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். இந்த ஹேர் மாஸ்கில் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம், ஆனால் இது விருப்பமானது. இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை விடவும். அதன் பிறகு லேசான ஷாம்பூ செய்யுங்கள். இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய்
வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் ஹேர் மாஸ்க் செய்ய, ஒரு முட்டையில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து, இந்த பேஸ்டை முடியில் தடவி 30 முதல் 40 நிமிடங்கள் காய விடவும். பிறகு தலையை கழுவவும்.  உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் பயன்படுத்தவும். எண்ணெய் பசை கொண்ட முடி இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பயன்படுத்தவும். முட்டையின் வாசம் பிடிக்காதவர்கள், தலையில் முட்டைக் கலவையை போட்ட பிறகு கடுகு எண்ணெயை தடவவும்.

Also Read | Long COVID: நீண்டகால கொரோனா என்றால் என்ன? அதற்கான காரணம் தெரியுமா?

வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்
முடியை கருப்பாக மாற்றுவதில் வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவை நல்ல பலனளிக்கக்கூடியது. முதலில் முடியின் வேர்களில் வெங்காயச் சாற்றை தடவி, பின்னர் முடியின் மேல் முனைகளில் ஆலிவ் எண்ணெயைத் தடவவும். உங்கள் தலைமுடி கருப்பு நிறமாக மாறுவதோடு, முடி உதிர்வதும் நின்றுவிடும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்
இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இந்த கலவையைக் கொண்டு முடியின் வேர்களில் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு, முடியை அப்படியே விட்டுவிடவும். 30 முதல் 40 நிமிடங்களுக்கு கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த செய்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் வெள்ளை முடியை கருமையாக்கலாம்.

இவை அனைத்தும் பொதுவான பயன்பாட்டிற்காக வழங்கப்படும் ஆலோசனைகள். நீங்கள் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின்படி செயல்பட்டு வந்தால், அதற்கு பதிலாக இவற்றை முயற்சித்துப் பாருங்கள் என்று சொல்வதாக பொருள் கொள்ளவேண்டாம்.

Also Read | Benefits of lemon: எலுமிச்சையில் உள்ள வியக்க வைக்கும் நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News