Seeds To Boost Iron: நம் உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமானதாக உள்ளது. அதன் குறைபாடு பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தும். பலவீனம், உடல் சோர்வு, தலைச்சுற்றலை, இரத்தசோகை ஆகியவை இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் ஆகும். நாம் நமது உணவில் சரியான அளவு இரும்புச் சத்தை சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.
பல இயற்கையான வழிகளில் நாம் இரும்புச்சத்து (Iron) குறைபாட்டை நீக்க முடியும். நாம் தினசரி உட்கொள்ளும் உனவுகளின் மூலமாகவே இதை செய்யலாம். இரும்புச்சத்து குறைபாட்டை போக்க உதவும் சில விதைகள் பற்றி இங்கே காணலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் (Pumpkin Seeds)அதிகமான அளவில் இரும்புச்சத்து உள்ளது. இதை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை எளிதாக சரி செய்யலாம். இவற்றை அப்படியே சப்பிடலாம், அல்லது, சாலட், ஸ்மூத்தி, கஞ்சி, கறிகள் ஆகியவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.
எள்
எள் (Sesame Seeds) இரும்புச்சத்தின் மிக நல்ல மூலமாக கருதப்படுகின்றது. இவற்றை அனைத்து உணவு வகைகளிலும் சேர்க்கலாம். குறிப்பாக எள் உருண்டை, எள் பொடி, ஆகியவை உடலுக்கு ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. எள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் இதனால் உடலுக்கு இரும்புச்சத்து உட்பட பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
சியா விதைகள்
சியா விதைகளில் (Chia Seeds) இரும்புச்சத்து, புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகமாக உள்ளன. சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம். சியா விதைகள் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
ஆளி விதைகள்
ஆளி விதைகளிலும் (Flax Seeds) இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை அரைத்து வைத்துக்கொண்டு, பருப்பு, மாவு, அல்லது பிற உணவு வகைகளில் சேர்த்து உட்கொள்ளலாம். தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைப்பாட்டை சரி செய்வதுடன் இது உடலுக்கு தேவையான இன்னும் பல வித நன்மைகளையும் அளிக்கின்றது.
மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா குறைக்கும் மூலிகைகள்: இப்படி சாப்பிட்டு பாருங்க
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளும் (Sunflower Seeds) இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். காலை உணவு, சாலட் அல்லது சிற்றுண்டியாக அவற்றை உண்ணலாம்.
விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும்?
இந்த விதைகளை (Seeds) நீங்கள் பல வழிகளில் சாப்பிடலாம். இவற்றை அப்படியே உட்கொள்ளலாம், அல்லது உணவு வகைகளில் சேர்த்து சிறிய அளவில் சாப்பிடலாம். இந்த விதைகள் உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கின்றன. இது மட்டுமல்லாமல் இவை உடலுக்கு பல ஆரொக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.
மகிச்சியான வாழ்க்கைக்கு ஆரோகியமான உடல் மிக அவசியம். ஆகையால் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் என எந்த வித குறைபாடு ஏற்பட்டாலும், அதை உடனடியாக சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இயற்கையான வழிகளில் இவற்றை சரி செய்வது மிக நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடிக்கடி வாயு, வயிற்று போக்கு ஏற்படுகிறதா... கணைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ