கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும்

Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2024, 01:40 PM IST
  • தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.
  • இந்த பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும்.
  • காலையில் செய்யும் உடற்பயிற்சி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும் title=

Health Tips For Liver and Kidney: நமது உடலில் சில பாகங்களை மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இவை நமது உடல் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவையாக விளங்குகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான உறுப்புகளில் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவையும் அடங்கும். இந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் பொதுவாக பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டு உறுப்புகளின் முக்கிய பணியும் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை அகற்றுவதுதான். ஆனால், நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை இவற்றின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தினம் தினம் மக்களிடையே இந்த உறுப்புகள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. 

சில எளிய இயற்கையான வழிகளில் நாம் நமது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சிறுநீரகம் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக காக்க உதவும் சில காலைப் பழக்கங்கள்

யோகாசனம்

தினமும் காலை வேளையில் யோகாசனங்களை செய்வது உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், செரிமான சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. யோகா உடலில் நல்ல நச்சுகளின் அளவை அதிகரிக்கிறது. அர்த்த மத்ஸ்யேந்திராசனம் மற்றும் பாசிமோத்தனாசனம் ஆகியவை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்த யோகாசனங்களாக கருதப்படுகின்றன. 

உணவில் அதிகப்படியான கவனம் தேவை

காலை உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், சீரியல்ஸ் மற்றும் பிரெட் போன்ற உணவுகளை காலை உணவாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது. இதன் மூலம் உடலுக்கு இது வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும். பூண்டு மற்றும் மஞ்சளும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லவையாக கருதப்படுகின்றன. 

மேலும் படிக்க |  அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் விரட்டி அடிக்கும் எளிய உணவுகள்

குளியல்

குளிப்பதன் மூலமும் இந்த உறுப்புகளை பாதுகாக்கலாம். இதற்கு மெதுவாக, மென்மையான முறையில் குளிக்க வெண்டும். அதிகாலையில் குளித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். குளிப்பதற்கு லேசான ப்ரெஷ் மற்றும் நல்ல பாடி வாஷ் பயன்படுத்தவும், இந்த பிரஷின் உதவியுடன் உடலை மெதுவாக தேய்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.

உடற்பயிற்சி

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இந்த பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். காலையில் செய்யும் உடற்பயிற்சி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுவதோடு, சுவாசப் பிரச்சனைகளும் குறையும். மேலும் இதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடும் மேம்படும்.

காய்கறி சாறு

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் 1 கிளாஸ் பச்சை காய்கறி சாறு குடிப்பது நல்லது. இந்த சாறுகளை உட்கொள்வதால் உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகரிக்கும். காய்கறி சாறுகள் உடலில் உள்ள நச்சுகளை விரைவாக நீக்க உதவுகின்றது. காலையில் கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், கீரை சாறு ஆகியவற்றை குடிக்கலாம். நச்சுகளை நீக்குவதோடு இந்த சாறுகள் உடலில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி-12 குறைபாட்டையும் நீக்குகின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  நரம்பு தளர்ச்சி முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் முருங்கை...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News