ஊறவைத்த வேர்க்கடலையின் வேற லெவல் நன்மைகள்: பல பிரச்சனைகளின் ஒரே வீட்டு வைத்தியம்

Benefits of Soaked Peanuts: காலை உணவில் ஊறவைத்த வேர்க்கடலையை சேர்த்தால், எண்ணற்ற நன்மைகளை பெறலாம். இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 2, 2023, 01:31 PM IST
  • செரிமானம் சிறப்பாக இருக்கும்.
  • மூளை மற்றும் கண்களுக்கு ஆரோக்கியமானது.
  • தோலுக்கு நன்மை பயக்கும்.
ஊறவைத்த வேர்க்கடலையின் வேற லெவல் நன்மைகள்: பல பிரச்சனைகளின் ஒரே வீட்டு வைத்தியம் title=

Health Tips in Tamil: ஒரு நாளில் நாம் பல முறை உணவு உட்கொள்கிறோம். சிலர் 3 முறை மட்டும் சாப்பிடுவார்கள். சிலர் அவ்வப்போது சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு நாளில் நாம் உண்ணும் உணவில் காலை உணவிற்கு அதிக முக்கியத்துவன் உள்ளது. காலை உணவில் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் உடல் நாள் முழுவதும் வேலை செய்யும் ஆற்றலைப் பெறுவதோடு, வயிறும் நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். பெரும்பாலானோர் காலை உணவாக எண்ணெய் பண்டங்களையும் உட்கொள்கிறார்கள். சிலரோ காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்கிறார்கள். 

காலையில் சாப்பிட முளைத்த பயறுகள், பயத்தம் பருப்பு கொண்டு செய்த உணவுகள், சீஸ், இட்லி, தோசை, பொங்கல், பழங்கள், காய்கறிகள் சாலட் ஆகியவற்றை சாப்பிடலாம். ஆனால் முளைத்த பயறு, விதைகள் அல்லது பிற சத்துள்ள பொருட்களுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காலை உணவில் ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுங்கள் (Benefits of Soaked Peanuts)

இந்த பதிவில் வேர்க்கடலையின் நன்மைகள், இதை எப்படி சாப்பிடுவது, இதை காலை உணவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம். வேர்க்கடலையை காலை உணவில் சேர்ப்பது உடலுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். விரத நாட்களில், மக்கள் பெரும்பாலும் வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவார்கள். சில காய்களை கறியாக சமைக்கும்போதும் அவற்றில் வேர்க்கடலையை சேர்க்கலாம். இது கறியின் சுவையை அதிகரிக்கும். 

சாதாரண வேர்க்கடலையை விட ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். காலை உணவில் ஊறவைத்த வேர்க்கடலையை சேர்த்தால், எண்ணற்ற நன்மைகளை பெறலாம். இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1. செரிமானம் சிறப்பாக இருக்கும் (Peanuts: Home Remedy For Digestion)

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு நார்ச்சத்து உணவாகும். நார்ச்சத்து உணவுகள் செரிமானத்திற்கு நல்ல நல்ல உணவுகளாக கருதப்படுகின்றன. ஆகையால், உலர்ந்த வேர்க்கடலைக்கு பதிலாக ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிட்டால், செரிமானம் மேம்படும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை ஓட ஓட விரட்ட.. பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க

2. மூளை மற்றும் கண்களுக்கு ஆரோக்கியமானது (Peanuts: Home Remedy For Memory)

ஊறவைத்த வேர்க்கடலையை காலை உணவில் உட்கொள்வது உங்கள் மூளை மற்றும் மனதை கூர்மையாக வைத்திருக்கும். இதை சாப்பிட்டால் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதனுடன், பார்வையில் சிரமம் இருந்தால் அது சரியாகி, கண்களின் பலவீனமும் போய்விடும். கண்களில் உள்ள மன அழுத்தம் நீங்கும். எனவே ஊறவைத்த வேர்க்கடலையை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

 3. தோலுக்கு நன்மை பயக்கும் (Peanuts: Home Remedy For Skin Care)

ஊறவைத்த வறுத்த வேர்க்கடலையை உட்கொள்வது உங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். உங்கள் முகத்தில் முகப்பரு பிரச்சனை இருந்தால் தினமும் இதை சாப்பிடுங்கள். சில நாட்களில் உங்கள் சருமம் முற்றிலும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நீங்கள் விரும்பினால், ஊறவைத்த வேர்க்கடலையுடன் 2 பாதாம் மற்றும் பயத்தப்பருப்பையும் ஊற வைத்து உட்கொள்ளலாம். இது ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்தது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெண்களுக்கு அதிலும் கர்பிணிகளுக்கு ஏன் மெக்னீசியம் அதிகம் தேவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News