Beetroot Parotta: குழந்தைகளை ஹெல்தியா சாப்பிட வைக்கனுமா? இந்த பீட்ரூட் பரோட்டாவை ட்ரை பண்ணுங்க!

Beetroot Paratta Recipe: குழந்தைகளை ஹெல்தியாக சாப்பிட வைக்கவும், நீங்கள் ஹெல்தியான உணவினை சுவையாக சாப்பிடவும் இந்த பிட்ரூட் பரோட்டாவை முயற்சி செய்து பாருங்கள்  

Written by - Yuvashree | Last Updated : May 19, 2023, 05:02 PM IST
  • பீட்ரூட் ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
  • பீட்ரூட் பரோட்டாவைஅனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
  • பீட்ரூட் பரோட்டா செய்முறை.
Beetroot Parotta: குழந்தைகளை ஹெல்தியா சாப்பிட வைக்கனுமா? இந்த பீட்ரூட் பரோட்டாவை ட்ரை பண்ணுங்க! title=

குழந்தைகளை பொறுத்த வரை காய்கறி என்றாலே கசப்புதான். அதிலும் பீட்ரூட் என்றால் யாருக்கும் சுத்தமாக ஆகாது. குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைக்க பெற்றோர்கள் விதவிதமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. அதில் ஒரு வழிமுறைதான் இந்த பீட்ரூட் பரோட்டா. 

பரோட்டா ஆரோக்கிய உணவு இல்லையே...

மைதாவினால் செய்யப்பட்ட பரோட்டாக்கள் ஆரோக்கிய உனவுகளில் ஒன்று இல்லைதான். ஆனல், அதை ஆரோக்கியமான உணவாக கருதுவதற்கு முதலில் அதை ஹெல்தி உணவு பொருட்களை சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு கோதுமை பரோட்டா சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும் உடலிற்கும் நல்லது. இதே போன்ற ஒரு ஹெல்தியான பரோட்டாதான் பீட்ரூட் பரோட்டாவும்.

மேலும் படிக்க | உணவு பிரியர்களே உஷார்..! பீட்ஸா அதிகம் சாப்பிடுவதனால் என்னென்ன ஆபத்துகள் வரும் தெரியுமா?

சுவையான பீட் ரூட் பரோட்டா!

இந்த பீட் ரூட் பரோட்டாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே சாப்பிடலாம். அந்த பரோட்டாவை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

பீட்ரூட் பரோட்டாவிற்கு தேவையான பொருட்கள்:

பீட்ரூட்-குடும்பத்தினர் அள்ளது உங்களுக்கு ஏற்றாவாறு எத்தனை வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்.
கோதுமை மாவு-இரண்டரை கப்
எண்ணெய் மற்றும் உப்பு-தேவையான அளவு
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்- தேவையான அளவு காரத்திற்கு ஏற்ப
ஓமம்-1 டீஸ்பூன்
தண்ணீர்-மாவு பிசைய தேவையான அளவு

பீட் ரூட் பரோட்டாவை எப்படி செய்வது?

பீட்ரூட்டை எடுத்துக்கொண்டு அதன் தோள்களை சீவுங்கள்.
பிறகு சீவியதை துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயை வைத்து கொஞ்சமாக எண்ணெஉ ஊற்றிக்கொள்ளுங்கள்.
துருவிய பீட்ரூட்டுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 5-6  நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் அதனுடன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கங்கள்.
கோதுமை மாவுடன் பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.
அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 13-15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். 
ஊற வைத்த மாவை பரோட்டாவாக திரட்டி சுட்டு எடுத்து சுவைக்கலாம். 

பீட்ரூட்டினால் ஏற்படும் நண்மைகள்:

கலர் கூட, உடலில் நீர்சத்து அதிகரிக்க என பல விஷயங்களுக்கு பீட்ரூட்டை பயன்படுத்தலாம். அதிகம் கொழுப்பு இல்லாத காய்கறிகளில் ஒன்று பிட்ரூட். இதில் நார்சத்து மற்றும் இரும்பு சத்து ஆகியவை உள்ளதால் உடலில் நோய் அண்டவிடாமல் தடுக்கிறது. 

பீட்ரூட்டினால் குணமாகும் நோய்கள்:

பீட்ரூட் சாப்பிடுவதனால் சில நோய்களும் தீரும். சில சமயங்களில் நமக்கு அல்சர் பாதிப்பு வரலாம். அப்படி அல்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட்டை தங்களது உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல, பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதை தேன் கலந்து வாரத்தில் 3 நாட்கள் சாப்பிடலாம். பீட்ருட் ஜூஸாக குடிக்கலாம். இப்படி செய்தால், அல்சர் குனமாக வாய்ப்புகள் அதிகம். பீட்ரூட்டினால் ரத்த சிவப்பணுக்கள் அதிகமாகும். இதில் வைட்டமின் பி1 சத்து அதிகம் இருப்பதால் ரத்தம் சம்பந்தமான நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் படிக்க | ஆசனவாய் கடுப்பை போக்கும் இயற்கை மருத்துவம்..! மலச்சிக்கல் - வயிற்றுவலிக்கும் நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News