Banana Side Effects: வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. உடலில் இருந்து சோர்வை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சிலருக்கு, வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் தீங்கு விளைவிக்கும். சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
மலச்சிக்கல் - வாழைப்பழம் (Banana) சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மலச்சிக்கல் (Constipation) பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்ளவதை தவிர்ப்பது நல்லது.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
உடல் பருமன் - வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் இயற்கை சர்க்கரை உள்ளது, இதை பாலுடன் சாப்பிட்டால், எடை அதிகரிக்கும்.
அமிலத்தன்மை - வாழைப்பழம் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது. வாழைப்பழத்தில் அதிக மாவுச்சத்து உள்ளது, இதன் காரணமாக செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும்.
சர்க்கரை அளவை அதிகரிக்கிறது - வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சிறிய அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன- வாழைப்பழத்தில் டைரோசின் அமினோ அமிலம் உள்ளது, இது உடலில் டைரமைனாக மாற்றப்படுகிறது. இது ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். வாழைப்பழம் சாப்பிடுவதால் பலருக்கு வயிற்று உப்புசம் மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR