Tips for Weight Loss: ஒல்லியான உடல்வாகைப் பெற எடை குறைப்பு டிப்ஸ்

Obesity Management:  ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையான பழக்கவழங்கங்கள் அவசியம். இது உடல் எடை கூடாமல் இருக்கத் தேவையான உணவுப் பழக்கங்கள்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2022, 02:30 PM IST
  • உடல் பருமன் அதிகரிப்பதற்கு அதிக உப்பு நுகர்வும் ஒரு காரணம்
  • உணவை மென்று சாப்பிடாவிட்டால் உடல் எடை அதிகரிக்கும்
  • சரியான தூக்கம் இல்லாவிட்டால் எடை அதிகரிக்கும்
Tips for Weight Loss: ஒல்லியான உடல்வாகைப் பெற எடை குறைப்பு டிப்ஸ் title=

உடல் எடை பராமரிப்பு டிப்ஸ்: உடற்பயிற்சி செய்ய நேரமும் இல்லை, உடல் உழைப்பும் குறைந்துவிட்டது, உடல் எடையோ கூடி விட்டது என வருந்தும் அனைவருக்கும் இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும். உடல் எடை அதிகரிப்பதற்கு நமது  சிறு சிறு தவறுகளே காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

தவறுகளை தவிர்த்து, சில பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் எடை சீராக இருக்கும். பிஸியாக இருக்கும்போது உணவைத் தவிர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம். சாப்பிடாமல் இருந்தால் எடை கூடாது என்ற நினைப்பு மிகவும் தவறானது.

உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், குறிப்பாக எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள், உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.  

மேலும் படிக்க | இரவு தூங்கும் முன் இந்த 4 உணவுகளை சாப்பிட்டால் தொப்பை கரையும்

கலோரி பற்றாக்குறை 
உடல் எடையை குறைக்க கலோரியை குறைப்பது சிறந்த வழி என்றாலும், கலோரி உட்கொள்ளலைக் கண்காணிக்கவில்லை என்றால் உடல் எடை இலக்கை அடையமுடியாது. விரைவாக எடை இழக்க விரும்பினால், கலோரிகளை கண்காணிப்பது அவசியமாகும்.

எடை இழப்பு முயற்சியின்போது எவ்வளவு உணவை உண்ண வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதைக் கண்டறியாவிட்டால்,ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணியாகவும் கலோரிகள் மாறிவிடும்.

உணவை மெல்லாமல் வேகமாக சாப்பிடும் பழக்கத்தால், வயிறு நிரம்பினாலும் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். இதனால் படிப்படியாக உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்து இறுதியில்  எடை அதிகரிக்கத் தொடங்குகிறது.

 

அதிக உப்பு நுகர்வு
உடலுக்கு தேவையான உப்பை விட 50 சதவிகிதம் அதிகமாக நாம் உட்கொள்கிறோம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்படாதபோது உப்பு நுகர்வு பற்றி யாரும் அதிகமாக கவலைப்படுவதில்லை. உண்மையில், அதிகப்படியான உப்பு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு என்பதோடு, எடை இழப்பு இலக்குகளை மோசமாக பாதிக்கிறது.

தூக்கம் குறைவு

எடை குறைப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பலர் உணர்வதில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணிநேரம் உறங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், குறிப்பாக  உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், பசியைக் கட்டுப்படுத்தவும், அதிக ஆற்றலுடன் உணரவும், செரிமானத்தை மேம்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், இவை அனைத்தும் எடையைக் குறைக்க முக்கியமானவை.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News