Apple Benefits: ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை என்று அப்பிளின் சிறப்பான பலன்கள் பற்றி பல மேற்கோள்கள் கூறப்பட்டு வருகிறது. ஆப்பிள்களின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உலகளவில் அதிகம் உட்கொள்ளப்படும் இரண்டாவது பழமாக ஆப்பிள் உள்ளது. அதிக ஊட்டச்சத்து அடர்த்தி மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக ஆப்பிள்கள் ஊட்டச்சத்து ஆற்றல் மையமாக உள்ளன. ஆப்பிள்கள் அதிகளவு ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறந்த சுவையையும் கொண்டிருப்பதால் இந்த பலருக்கும் பிடித்தமான பழமாக இருந்து வருகிறது. ஆப்பிள்கள் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற உணவுப் பைட்டோ கெமிக்கல்களின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. கூடுதலாக இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. புளிப்பு பச்சை ஆப்பிள்கள் அல்லது புஜி, ரெட் டெலிசியஸ் அல்லது காலா போன்ற இனிப்பு சிவப்பு வகைகள் என எதுவாக இருந்தாலும் சரி, அனைத்து ஆப்பிள்களிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இப்போது ஆப்பிளின் முதன்மையான ஐந்து பயன்கள் பற்றி இங்கே காண்போம்.
மேலும் படிக்க | Protein Quality: இந்தியர்களின் உணவில் தரமான புரதம் இல்லையா? என்ன சொல்றீங்க?
1) ஒரு நாளைக்கு இரண்டு ஆப்பிள்கள் வரை சாப்பிட்டால் உடலிலுள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று நடுத்தர அளவிலான ஆப்பிள்களை சாப்பிடும்பொழுது உடலிலுள்ள மொத்த கொழுப்புக்களின் அளவில் 5% முதல் 13% வரை குறைகிறது. ஆப்பிளில் நிறைந்துள்ள பெக்டின், உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
2) ஆப்பிளில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஒரு பெரிய ஆப்பிளில் 116 கலோரிகள் மற்றும் 5.4 கிராம் நார்ச்சத்து உள்ளது, இது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. பெண்களுக்கு பத்து வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்று ஆப்பிள்கள், மூன்று பேரிக்காய்கள், மூன்று ஓட்ஸ் குக்கீகள் வழங்கப்பட்டன. ஓட்ஸ் சாப்பிட்டவர்களின் எடையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை, அதேசமயம் ஆப்பிள் சாப்பிட்டவர்களில் 2.1 பவுண்டுகள் (0.93 கிலோ) மற்றும் பேரிக்காய் சாப்பிடுபவர்களில் 1.6 பவுண்டுகள் (0.84 கிலோ) எடை குறைந்தது கண்டறியப்பட்டது.
3)) ஆப்பிளில் நிறைவுற்ற கொழுப்பு, உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற எதுவுமே இல்லை, இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு இதயம் தொடர்பான எவ்வித பாதிப்பும் வராது. இவை அனைத்தும் அதிக அளவுகளில் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆப்பிளில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
4) ஆப்பிள் இதயத்திற்கு மட்டுமல்ல, மூளைக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. ஆப்பிள் சாப்பிடுவதால் உங்கள் மூளை செல்கள் பாதுகாப்பாக இருப்பதோடு உங்கள் மனமும் நன்றாக இருக்கும். கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின்படி, ஆப்பிள் மூளை செல்களை ஃப்ரீ ரேடிக்கல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது.
5) தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வருவது எலும்பு கோளாறுகளிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான உயர் எலும்பு அடர்த்தி ஆப்பிள்களால் மேம்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சாப்பிடுவது ஆக்ஸிஜனேற்ற கூறுகளால் எலும்பு வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சீரகம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை: பக்க விளைவுகளின் பட்டியல் இதோ!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ