பொதுவாக, 40 வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து, முதுமையின் தாக்கம் மெதுவாகத் வெளிவரத் தொடங்குகிறது. வயதாகும் போது, உடல் கொலாஜனை உற்பத்தி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சருமத்தின் கட்டமைப்பு குலைந்து, சுருக்கங்கள் உருவாகின்றன. சருமத்தின் தோற்றம் மற்றும் இளமை ஆகியவற்றில் கொலாஜன் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே, கொலாஜன் நிறைந்த உணவுகள் அல்லது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி சுருக்கங்களை போக்கி இளமையாக வைத்திருக்கும்.
சருமம், எலும்புகள், தசைகள், தோல் மற்றும் தசைநாண்களில் காணப்படும் கொலாஜன் மனித உடலில் அதிகளவில் இருக்கும் புரதம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் 50 வயதிற்கு மேல், கொலாஜன் உற்பத்தியில் கணிசமான சரிவு ஏற்படுவது இயல்பானது. இதன் அறிகுறியாக, தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாமை போன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி, ஒரு வயதிற்குப் பிறகு, சர்க்கரை நோய், இதய நோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை, தைராய்டு போன்ற தீவிர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து உடல் கொலாஜனை உற்பத்தி செய்கிறது. எனவே, உணவில் சில ஆரோக்கியமான உணவுகளை (Health Tips) சேர்ப்பதன் மூலம் உடலில் கொலாஜன் உருவாகும் செயல்முறையை அதிகரிக்கலாம்.
கொலாஜன் நிறைந்த சில உணவுகள்
சிட்ரஸ் பழங்கள்
எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இவை உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நச்சுகளை வெளியேற்றி, நல்ல ஊட்டமான சருமத்தை பெறவும் உதவுகின்றன. வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காயை சாப்பிடுவது உடலில் கொலாஜன் அளவை அதிகரிக்கும். வைட்டமின் சி ஊட்டசத்தில் லைசின் மற்றும் புரோலின் போன்ற இரண்டு அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது, அவை பிணைப்புகளாக செயல்படுகின்றன. மேலும் இவை ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது, இது ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைத்து, சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது.
டோஃபு
கொலாஜன் நமது உடலில் கிளைசின், லைசின் மற்றும் புரோலின் ஆகிய மூன்று அமினோ அமிலங்களை இணைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. டோஃபு என்பது இந்த மூன்று அமினோ அமிலங்களும் காணப்படும் ஒரு உணவாகும். எனவே, டோஃபு சருமத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. டோஃபுவில் கொலாஜன் உற்பத்தியை விரைவுபடுத்தும் ஜெனிஸ்டீன் என்ற தாவர ஹார்மோன் உள்ளது. இது தவிர, டோஃபு கொலாஜன் உருவாவதைத் தடுக்கும் எம்எம்பி என்சைமை நீக்குகிறது.
மேலும் படிக்க | Disease X என்ன செய்யும்? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலன் தருமா? எதிர்கால தொற்றுநோய்கள்
முருங்கை
வைட்டமின் சி நிறைந்த முருங்கை, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு அற்புதமான சூப்பர்ஃபுட். முருங்கை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனையை குறைக்கலாம். அதே சமயம் புற ஊதாக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது. முருங்கைக்காயில் நல்ல அளவு குளோரோபில் உள்ளது, இது கொலாஜனை அதிகரிக்கிறது.
தக்காளி
தக்காளியும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவாகும். தக்காளியில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பதால் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. தக்காளியில் லைகோபீன் உள்ளது, இது சருமத்தை ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இது நிறமி, நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. தக்காளி சாப்பிடுவது கொலாஜனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த சருமத்தையும் குணப்படுத்துகிறது.
சப்ஜா விதைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சப்ஜா விதைகள் சருமத்திற்கு ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். இதனால் உடலில் கொலாஜன் அளவு அதிகரிக்கிறது. சப்ஜா விதைகள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம், மெல்லிய கோடுகள் மற்றும் முதுமையை நீக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Tomatoes: தக்காளியை இப்படி சாப்பிட்டா பிரச்சனையே இல்ல.... இரத்த அழுத்தமும் குறையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ