Anemia: சோர்வைக் கொடுக்கும் இரத்த சோகை... அறிகுறிகளும் தீர்வுகளும்..!

Anemia Home Remedies: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாடு, ஆங்கிலத்தில் அனிமியா என அழைக்கப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2024, 04:35 PM IST
  • அனிமியா என்னும் ரத்தசோகை நோய் நீங்க உணவில் சேர்க்க வேண்டியவை.
  • ரத்தசோகை ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றன.
  • ரத்த சோகை ஏற்பட இரும்பு சத்து குறைபாடு மட்டும் காரணம் அல்ல.
Anemia: சோர்வைக் கொடுக்கும் இரத்த சோகை... அறிகுறிகளும் தீர்வுகளும்..! title=

Anemia Home Remedies​ in Tamil: ரத்த சோகை என்பது உடலுக்கு சோர்வையும் பலவீனத்தையும் ஏற்படுத்தும் ஒரு நோயாகும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாடு, ஆங்கிலத்தில் அனிமியா என அழைக்கப்படுகிறது. ரத்தசோகை ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றன என்று பொதுவாக கூறப்படுவது. ரத்த சோகை ஏற்பட இரும்பு சத்து குறைபாடு மட்டும் காரணம் அல்ல. வைட்டமின் பி12, சத்து குறைபாட்டினாலும் ரத்தசோகை ஏற்படுகிறது. ஏனெனில் இந்த சத்துக்கள் குறைந்தாலும், உணவிலிருந்து இரும்புச் சத்தை கிரகித்துக் கொள்ளும் திறனை உடல் இழக்கிறது.

ரத்தத்தில் இரண்டு வகையான செல்கள் உள்ளன. மூன்று வெள்ளை ரத்த அணுக்கள். மற்றொன்று சிவப்பு ரத்த அணுக்கள். இவற்றில் சிவப்பு ரத்த அணுக்களும் குறைபாடு ரத்த சோக ஏற்பட முக்கிய காரணமாகிறது. இது ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. நமது உடலில் செல்களில் ஆப்ஷனை வழங்கும் வேலையை இரத்த சிவப்பு அணுக்கள் செய்கின்றன. எனவே ரத்த சோகை காரணமாக, உடலில் அதிக சோர்வும் பலவீனமும் (Health Tips) ஏற்படும்.

ரத்த சோகை நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள்

கொஞ்சம் வேலை செய்தாலே சோர்வாக உணர்தல், மிகவும் பலவீனமாக உணர்தல், அடிக்கடி மயக்கம் ஏற்படுதல், சுவாசிப்பதில் சமம் அல்லது மூச்சுத் திணறல் அடிக்கடி ஏற்படுதல், கை கால்கள் குளிர்ச்சியாக இருத்தல் ஆகியவை ரத்த சோகை நோய் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.

அனிமியா என்னும் ரத்தசோகை நோய் நீங்க உணவில் சேர்க்க வேண்டியவை:

கீரை

இரும்புச்சத்துடன் கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் நார்ச்சத்து உள்ள கீரை இரத்த சோகையை நீக்கும் அருமருந்து. கீரை வகைகள் அனைத்திலும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதிலும் முருங்கை கீரை மிகவும் சிறந்தது. ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் கீரை மூலம் பலவீனம் மற்றும் சோர்வும் முழுமையாக நீங்கும்

பேரீச்சம்பழம்

உடலில் இரத்த பற்றாக்குறையை ஈடுசெய்ய, உங்கள் உணவில் பேரீச்சம்பழம் சேர்க்கவும். இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபட பேரீச்சம்பழம் மிகவும் நன்மை பயக்கும்.தினமும் பத்து பேரீச்சம் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால், சத்துக்கள் முழுமையாக கிடைத்து இரட்டிப்பு பலன்களைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை ஒழித்து கட்ட உதவும்... மேஜிக் மசாலா!

பீட்ரூட்

இரத்த சோகையை நீக்க பீட்ரூட் மிகவும் பயனுள்ள காய்கறி. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம். ஹூமோகுளீபின் சட்டென்று அதிகரிக்க, பீட்ரூட்டை தினமு சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

ரத்த சோகையை நீக்கும் எலுமிச்சை பானம்

உடலில் உள்ள இரும்பு சத்து குறைபாடு நீங்க எலுமிச்சை சாறூடன் வெல்லம் அல்லது தேன் கலந்த பானம் நன்மை பயக்கும். தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில், எலுமிச்சை சாறு கலந்து ஒரு ஸ்பூன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கவும். அதோடு உங்கள் உணவில் தினமும் வெல்லம் சேர்ப்பதும் பலனளிக்கும். இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் இரத்த சோகையை போக்குகிறது.

பூண்டு

ஹீமோகுளோபின் குறைபாட்டைப் போக்க பூண்டு மிகவும் சிறந்தது. பூண்டை பச்சையாக உண்பது பலனளிக்கும். இந்த ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் பூண்டு சட்னி மற்றும் பூண்டு ஊறுகாய் சாப்பிடலாம்.

உலர் பழங்கள்

 உணவில் உலர் பழங்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். வாதுமை பருப்புகள் மற்றும் பிஸ்தா பருப்புகள் இரத்த சோகைக்கு அருமருந்தாகும் சிறந்த உலர் பழங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News