Coffee Tea Side Effects: இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு காலையில் காபி அல்லது டீ குடிக்காமல் பொழுது விடியாது. இந்த சூடான பானங்களை விரும்புவோருக்கு பஞ்சமில்லை. பலரோ ஒரு நாளைக்கு பல முறை காபி அல்லது டீ சாப்பிடுகிறார்கள். இது மனதை புத்துணர்ச்சியடையச் செய்து, உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. மனம் சோர்வாக இருக்கும் போது இதை குடித்தால், நம் இறுக்கங்கள் தளர்ந்து நம்மால் நம் பணிகளில் இயல்பாக ஈடுபட முடிகின்றது.
பக்க விளைவுகள்:
ஆனால் டீ-காபி நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது பலருக்கு தெரிவதில்லை. ஏனெனில் டீ, காபி என இந்த இரண்டிலும் காஃபின் உள்ளது. இது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த பானத்தை சில நாட்கள் விட்டுவிட வேண்டும் என்று கூறினால், பலருக்கு அது முடியாத ஒரு காரியமாக தெரியும். ஏனெனில், இவை இரண்டுமே ஒருவரை அந்த அளவிற்கு அடிமையாக்கி விடுகின்றன. ஆனால் இப்படி செய்வது நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் ஒரு மாதம் டீ, காபி சாப்பிடாமல் இருந்தால், அவரது உடலில் என்னென்ன ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வரும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
டீ / காபி நிறுத்துவதால் எற்படும் மாற்றங்கள்
1. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
டீ மற்றும் காபி சோர்விலிருந்து நிவாரணம் அளித்தாலும், அவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இது ஒரு நல்ல விஷயம் அல்ல. இந்த பானங்களில் காஃபின் இருப்பதால், ஒரு மாதம் டீ, காபி குடிப்பதை நிறுத்தினால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். சமநிலையற்ற இரத்த அழுத்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இப்படி செய்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | அதிகப்படியான வைட்டமின் டி கூட ஆபத்தானது! அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்
2. நிம்மதியான தூக்கம் வரும்
தேநீரை உட்கொள்ளாமல் இருப்பது உங்கள் தூக்கத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். குழந்தை பருவத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்பதை நினைத்து பாருங்கள். ஆனால் நீங்கள் வளர்ந்த பிறகு, நீங்கள் உட்கொள்ளும் காஃபின் கொண்ட பானங்களின் அளவும் அதிகமாகின்றது. இதனால் தூக்கம் வருவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. டீ மற்றும் காபி குடிப்பதை விட்டுவிட்டால் ஒரு வாரத்தில் உங்கள் தூக்கத்தில் அபரிதமான முன்னேற்றம் ஏற்படும். ஒரு மாதத்தில் நீங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை உணர முடியும். காஃபின் நமது நியூரான்களை செயல்படுத்துவதால், டீ மற்றும் காபி குடித்தால், நிம்மதியான தூக்கம் வருவதில் தடைகள் ஏற்படுகின்றன.
3. பற்களில் வெண்மை வரும்
தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பொருட்கள் நம் பற்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இவை பற்களின் நிறத்தை மாற்றுவதோடு அவற்றின் வலுவை குறைத்து அவற்றை பலவீனப்படுத்துகின்றன. ஒரு மாதம் டீ, காபி குடிப்பதை நிறுத்தினால், பற்களில் ஏற்படும் பெரிய பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். மேலும் பற்களில் புதிய வெண்மை வர ஆரம்பிக்கும். டீ-காபி சிறிது அமிலத்தன்மை கொண்டவை. ஆகையால் இவற்றை அதிகம் உட்கொள்வது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். இது பற்கூச்சத்தையும் ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | hair dye: முடி சாயம் டெம்ப்ரவரியா அழகாக்கும்! ஆனா, வேற பிரச்சனைகளை வரவேற்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ