ஊமத்தை இலை சிவபெருமானுக்கு உகந்த இலை. வில்வ இலைக்கு இணையாக ஊமத்தை இலையையும் கூறலாம். நச்சு முட்கள் நிறைந்த இந்த இலைகள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஊமத்தையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, இது வழுக்கை பிரச்சனையையும் நீக்குவதுடன், காதுவலி மற்றும் காயங்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. கரு ஊமத்தை மற்றும் அதன் இலைகள் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன.
மூட்டு வலிக்கும் உதவும்
கரு ஊமத்தையி உள்ள பண்புகள் காயத்தை குணப்படுத்துவதில் இருந்து உடல் திறனை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் . இதன் பயன்பாடு மூட்டு வலி முதல் ஆண்களின் உடல் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. அதாவது, இந்த இலை விஷமாக இருந்தாலும், அற்புதமான பலன்களை கொண்டது.
மேலும் படிக்க |நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!
தலை முடி உதிராது
பெரும்பாலான மக்களுக்கு தலையில் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இப்பிரச்னையில் இருந்து விடுபட எடுக்கப்பட்ட பல முயற்சிகளுக்கு பலன் இல்லாத நிலையில், நீங்கள் கரு ஊமத்தை இலைகளைப் பயன்படுத்தினால், நிச்சயமாக பலன் கிடைக்கும். மிக முக்கியமாக, உச்சந்தலையில் விழும் வழுக்கையை தடுக்கும்.
காயங்களை குணப்படுத்த உதவும்
கரு ஊமத்தை இலைகள் எந்த வகையான காயம் மற்றும் காயத்தை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே சமயம், மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின் பேரில், அதன் சாற்றை வெட்டு மற்றும் காயம் பட்ட இடத்தில் தடவவும்.
காது வலிக்கு நிவாரணம்
இது தவிர, காதில் வலி இருந்தால், கரு ஊமத்தை இலை உங்கள் பிரச்சனையை நீக்கும். உண்மையில், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் காதுவலி பிரச்சனையை குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR