Health Benefits of Cloves: கிராம்பை நமது சமையலறையில் நாம் பல வித உணவு வகைகளில் பயன்படுத்துகிறோம். இது உணவுக்கு நல்ல சுவையை அளிப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. சிறிய அளவில் இருக்கும் இந்த மசாலா நமக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் மிக அதிகம். கிராம்பில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கிராம்பு சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
கிராம்பு உணவின் சுவையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இது காய்கறிகள், புலாவ், தேநீர், இனிப்பு வகைகள் என பல வகையான உணவு வகைகளில் பயன்படுகின்றது. ஒரு பொருளை கிராம்புடன் சேர்த்து 3 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால், பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த பொருள் எலுமிச்சை. கிராம்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
கிராம்பை எலுமிச்சையுடன் சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
செரிமானம்
எலுமிச்சை மற்றும் கிராம்பு சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் (Digestion) ஆரோக்கியமாக இருக்கும். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களின் செரிமானம் சீராகும். எலுமிச்சை மற்றும் கிராம்பு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
கிராம்பு மற்றும் எலுமிச்சை இரண்டிலும் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. உடலின் ஏதாவது பகுதியில் வீக்கம் இருந்தால், கிராம்பு மற்றும் எலுமிச்சையை ஒன்றாக கலந்து சாப்பிட வேண்டும். இந்த கலவை மூலம் வெளிப்புற வீக்கத்திற்கு மட்டுமல்லாமல், உட்புற வீக்கத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்: தினமும் சாப்பிடுங்க
மூட்டு வலியிலிருந்து நிவாரணம்
எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி (Joint Pain) இருந்தால், கிராம்பு மற்றும் எலுமிச்சை சாப்பிடுவதால் இதை சரி செய்யலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இவை வலுவான எலும்புகளுக்கு மிக அவசியம். எலுமிச்சை மற்றும் கிராம்பை சேர்த்து சாப்பிடுவதால், திசுக்கள் சீராகும். அவற்றின் செயல்பாடு மேன்மையடையும்.
சுவாச ஆரோக்கியம்
கிராம்பு மற்றும் எலுமிச்சை கலவையை சாப்பிடுவது சுவாசம் (Breathing) அல்லது நுரையீரல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதுமட்டுமின்றி, கிராம்படன் எலுமிச்சையை சேர்த்து உட்கொள்வது இருமல், சளி, ஆஸ்துமா போன்றவற்றிலும் நன்மை பயக்கும்.
ஃப்ரீ ரேடிக்கல்கள்
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இதுமட்டுமின்றி இதில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இதனால் தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தவும், தோலில் இருந்து சிவப்பு புள்ளிகளை அகற்றுவதிலும் இவை உதவியாக இருக்கும்.
எலுமிச்சை-கிராம்பு கலவவையை எப்படி உட்கொள்ள வேண்டும்?
எலுமிச்சையுடன் கிராம்பை இரண்டு வழிகளில் உட்கொள்ளலாம்:
- கிராம்பு மற்றும் எலுமிச்சை தேநீர் செய்து காலை அல்லது மாலையில் குடிக்கவும்.
- கிராம்பு மற்றும் எலுமிச்சை துண்டுகளை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து, மறுநாள் அந்த நீரை குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தீபாவளியில் எடை ஏறிவிட்டதா? வேகமாக வெயிட் லாஸ் செய்ய உதவும் சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ