அலுவலக வேலை என்றாலே 8 மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்ய வேண்டியிருக்கும். அப்படி வேலை செய்பவர்களுக்கு உடல் இயக்கம் மிகவும் குறைவு என்பதால், இதயநோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உட்கார்ந்த வாழ்க்கை முறை என்பது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். போதுமான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | கடுமையான நோய்களை ஏற்படுத்தும் புரத சத்து குறைபாடு; அலட்சியம் வேண்டாம்
சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வின்படி, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 20 விழுக்காடு அதிகம் என தெரிவித்துள்ளனர். 11 ஆண்டுகளில் 21 நாடுகளை சேர்ந்த 105,677 பேரின் பதிவுகளை அவர்கள் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.
அந்த ஆய்வுகளில் உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருந்தவர்களில் 2,300 மாரடைப்பும், 3,000 பேருக்கு பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது. 700 பேருக்கு இதய செயலிழப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு ஊழியர் மேசையில் செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பது மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, புகைபிடிப்பதை கட்டுப்படுத்துவது போன்றவற்றின் மூலமாக இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கான அபாயத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடல் செயல்பாடு இல்லாமல், 8.8% இறப்புகளும், 5.8% இதய நோய்களும் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், பணியின் இடையிடையே வழக்கமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஒரு நபரின் தோரணை, மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்த நிலைகளையும் பாதிக்கிறது. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகரித்த கொழுப்பு மற்றும் கீல்வாதம் போன்ற பிற உடல்நல அபாயங்களும் வழிவகுக்கும். நீண்ட நேரம் மேஜையில் அமர்ந்தபடி வேலை செய்வதால் இதய செயலிழிப்பிற்கான அபாயம் அதிகம் என்பதும் கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Diabetes: நீரிழிவு நோயால் கைகளில் வலியா? இப்படி நிவாரணம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR