30+ ஆண்கள் கவனத்திற்கு... இந்த விஷயங்கள் குறித்து ரொம்ப எச்சரிக்கையாக இருங்க!

Health Alert for 30+ Men: 30 வயதிற்கு பிறகு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் உடல் நல பிரச்சனைகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடியும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2024, 11:09 AM IST
  • சோர்வு மன அழுத்தம் ஆகியவை காரணமாக, ஆற்றல் குறைவாக காணப்படும்.
  • 30 வயது கடந்த ஆண்களுக்கு, போஸ்ட்ரைட் புற்றுநோயின் ஆபத்து அதிகமாக இருக்கும்.
  • பெரும்பாலானோருக்கு, கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படுகிறது.
30+ ஆண்கள் கவனத்திற்கு... இந்த விஷயங்கள் குறித்து ரொம்ப எச்சரிக்கையாக இருங்க! title=

Health Alert for 30+ Men: 30 வயதிற்கு பிறகு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் உடல் நல பிரச்சனைகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடியும். இன்றைய காலகட்டத்தில், துரிகதியிலான வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதினர் கூட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

பொதுவாகவே 30 வயதிற்கு பிறகு, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள் பலவீனம் அடையத் தொடங்கும். சோர்வு மன அழுத்தம் ஆகியவை காரணமாக, ஆற்றல் குறைவாக காணப்படும். இந்நிலையில், 30 வயதிற்கு பிறகு ஆண்களுக்கு என்னென்ன நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது (Health Tips) என்பதை அறிந்து கொண்டால், அது வராமல் தடுக்கலாம்.

ப்ரோஸ்ட்ரேட் புற்றுநோய்

ஆண்களின் சிறுநீர்ப்பை கீழே மற்றும் மலக்குடலுக்கு முன்னால் அமைந்துள்ள ஒரு சிறிய வால்நட் வடிவ சுரப்பி தான் புரோஸ்டேட் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது கடந்த ஆண்களுக்கு, போஸ்ட்ரைட் புற்றுநோயின் (Prostrate Cancer) ஆபத்து அதிகமாக இருக்கும். இரவில் அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாக இருக்கலாம். இது போன்ற பிரச்சனை உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். எதையுமே ஆரம்ப காலத்தில் கண்டறிந்து விட்டால், சிகிச்சை அளிப்பதும் குணம் ஆவதும் எளிதான விஷயமாக இருக்கும்.

மேலும் படிக்க | சோகமாக உணர்கிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிட்டால் மகிழ்ச்சி அடையலாம்!

தசைகள் சுருங்கி வலுவை இழத்தல்

பொதுவாக 30 வயதிற்கு பிறகு, இசைகள் சுருங்கத் தொடங்குகின்றன. இதனால் வலி ஏற்படலாம். எனவே உடற்பயிற்சி யோகா ஆகியவற்றை தவறாமல் செய்வதால், இதனை தடுக்கலாம். நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க, இதனை தவறாமல் செய்ய வேண்டும்.

எலும்புகள் பலவீனமடைதல்

30 வயது கடந்த நிலையில், பொதுவாக பெரும்பாலானோருக்கு, கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன. எலும்பு முறிவு ஆபத்து அதிகரிக்கிறது. எனவே எனவே கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை, தவறாமல் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி என் முக்கிய ஆதாரமான சூரிய ஒளி உடலில் படும்படி, தினமும் அரை மணி நேரம் ஆவது செலவிட வேண்டும்.

உடல் பருமன்

30 வயதான பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனை உடல் பருமன். பல சமயங்களில் உடல் பருமன் தான், பலவிதமான நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 30 வயதிற்கு பிறகு வளர்ச்சியை மாற்றம் குறைவதாலும், இன்ன பிற காரணங்களாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் டயட் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

இதயம் தொடர்பான பிரச்சனைகள்

30 வயதை தாண்டியவுடன், இதயத்தின் செயல் திறன் தொடங்குகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்ட திறன் சிறிதளவு பாதிக்கப்படுவதோடு, கொலஸ்ட்ராலும் அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனை, மாரடைப்பு ஆபத்து ஆகியவை அதிகரிக்கும். எனவே, இது குறித்து எச்சரிக்கையாக இருந்து, ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடிக்கவும்.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

மேலும் படிக்க | ஆரோக்கியமாய் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்! நாட்டுக் காய்களின் அற்புத மேஜிக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News