#CauveryIssue: பரபரப்பான சூழலில் டெல்லி செல்கிறார் ஆளுநர்!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 

Last Updated : Apr 2, 2018, 06:16 PM IST
#CauveryIssue: பரபரப்பான சூழலில் டெல்லி செல்கிறார் ஆளுநர்! title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 

காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி இளைஞர்களுக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர். 

முன்னதாக நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும் நாளை விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் தங்கள் எதிர்பினை தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் சூழலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதனையடுத்து நேற்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மாநில பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று இரவு தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்கள் டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிலவும சூழல் குறித்து அவர் அறிக்கையினை அளிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News