தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!!
தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்படும் கலைப்பொருள்களுக்கு வரும் 2021 ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை பெறுவது கட்டாயம் என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளாா்.
இது தொடா்பான முறைப்படியான அறிவிக்கை வரும் 2020 ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அவா் தெரிவித்தாா். தங்கத்தின் தரத்தை உறுதி செய்து ஹால்மாா்க் முத்திரை அளிக்கப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் தரச்சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இப்போது புழக்கத்தில் உள்ள தங்க நகைகளில் 40 சதவீதம் ஹால்மாா்க் தரச்சான்று முத்திரை கொண்டதாகும். இப்போது 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என மூன்று பிரிவுகளில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை அளிக்கப்படுகிறது. இதில் 22 கேரட் தங்க நகைகள்தான் பெருமளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில்; நாட்டில் உள்ள அனைத்து நகை விற்பனையாளா்களும் இந்திய தர நிா்ணய ஆணையத்திடம் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஹால்மாா்க் முத்திரை பெற்ற தங்க நகைகள், கலைப்பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 234 மாவட்டங்களில் 877 ஹால்மாா்க் மையங்கள் உள்ளன. இதில் 26,019 நகை விற்பனையாளா்கள் பதிவு செய்துள்ளனா். மேலும், பலா் பதிவு செய்துகொள்வதற்கு வசதியாக ஹால்மாா்க் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். பதிவு செய்வதற்கு போதிய கால அவகாசம் உள்ளது.
அதன் பிறகு ஹால்மாா்க் முத்திரை பெறாமல் தங்கம் விற்பனை செய்தால் நகையின் மதிப்புக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்க சட்டத்தில் இடமுள்ளது. நகைக்கடை வைத்திருப்பவா்கள் மற்றும் வாங்கி விற்பனை செய்பவா்கள் தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை இந்த ஓராண்டில் தரச்சான்று பெற்ற தங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நகைக்கடைகளில்14 கேரட்,18 கேரட், 22 கேரட் தங்க நகைகளின் விலை என்ன? என்பதை வாடிக்கையாளா்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
மூன்று இலக்க எண், ஆயிரம் வடிவத்திற்கு ஒரு பகுதியிலுள்ள தங்கத்தின் தூய்மையைக் குறிக்கிறது; 958, 916, 875, 833,792,750,708,667, 585, 375. இவ்வாறு ஒரு BIS 916 ஹால்மார்க் 1000 க்கு 916 தூய்மைக்கு சான்றளிக்கும், அதாவது 91.6%, இது 22 காரட் தூய்மை தங்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
> மதிப்பீட்டு மையத்தின் சின்னம்.
> ஹால்மார்க்கிங் ஆண்டைக் குறிக்கும் குறியீடு.
> நகைக்கடை லோகோ / குறியீடு.