இந்தோனேஷியாவில், பயணிகள் விமானம் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Sriwijaya Air Flight 182 விமானத்தில் 59 பேர் இருந்தனர். அந்த விமானம் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஜகார்த்தாவில் (Jakarta) இருந்து பொன்டியநாக்கிற்கு சென்றுக் கொண்டிருந்தது. பகல் 1.25 மணிக்கு இந்த விமானம் கிளம்பியது. 6 குழந்தைகள், பயணிகள், விமானப் பணியாளர்கள் என மொத்தம் 59 பேர் விமானத்தில் இருந்தனர்.
விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் (Flight), பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ரேடாரில் இருந்து மாயமானது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் மாயமான விமானம் கடலில் விழுந்திருக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.
Also Read | Covid பயத்தால் மொத்த டிக்கெடையும் வாங்கி ஒத்தையா விமானத்தில் பயணித்த கோடீஸ்வரர்!
இந்தோனேஷிய (Indonesia)தலைநகர் ஜகார்தாவில் இருந்து கிளம்பிய சற்று நேரத்தில் விமானம் மாயமானதை அடுத்து, விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR