எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 10 வீடுகள் தீ-க்கு இரையானது!

மத்திய பிரதேச மாநிலம் தின்டோரி பகுதியில், எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள் தீ-க்கு இரையாகின!

Last Updated : Mar 30, 2018, 08:35 PM IST
எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 10 வீடுகள் தீ-க்கு இரையானது! title=

மத்திய பிரதேச மாநிலம் தின்டோரி பகுதியில், எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10-க்கு மேற்பட்ட வீடுகள் தீ-க்கு இரையாகின!

மத்திய பிரதேச மாநிலம் தினடோரியில் இன்று, எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து சிதரியது. இதனால் விபத்துக்குள்ளன வீடு தீப்பற்றி எரிந்தது. இந்த தீயானது விரைவிலேயே அருகில் இருக்கும் வீடுகளுக்கும் பரவியது.

இதனால் அப்பகுதியில் இருந்த 10-க்கும் அதிகமான வீடுகள் தீக்கு இரையாகின. விவரம் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயனைப்பு படையினர் நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களினால் பொதுமக்களின் உடைமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச்சம்வமானது தற்செயலாக நடைப்பெற்றதா இல்லை திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Trending News