அட்ராசிட்டி தாத்தாவின் ஜாலி குத்தாட்டம்! வைரலான வீடியோவால் ஜெயிலுக்குள் சென்ற சோகம்...

தாத்தாவின் உற்சாக நடனம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வைரலானால், அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஆச்சரிய வைரல்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 09:40 AM IST
  • பேரன் பிறந்ததை கொண்டாடிய தாத்தா வீடியோ வைரல்
  • வீடியோ வைரலானதால் தாத்தா சிறைக்குள் சென்ற சோகம்
  • கொண்டாட்டமா? மதுத்தடையா?
அட்ராசிட்டி தாத்தாவின் ஜாலி குத்தாட்டம்!  வைரலான வீடியோவால் ஜெயிலுக்குள் சென்ற சோகம்... title=

புதுடெல்லி: அண்மையில் வைரலாகும் வீடியோக்களில் டான்saaடும் தாத்தாவும், அவரது அட்ராசிட்டி அலைப்பறையும் வைரல் நம்பர் ஒன் என சொல்லும் வகையில் இருக்கிறது.

பேரன் பிறந்ததை கொண்டாட ஆர்கெஸ்ட்ராவை அழைத்த தாத்தா மகிழ்ச்சியைக் கொண்டாட மேடையில் டான்ஸ் (Dancing Grandfather) ஆடினார். ஆனால், டான்ஸ் ஆடிய தாத்தா இப்போது ஜெயிலில் இருப்பதை என்ன சொல்வது?

தாத்தாவின் டான்ஸைப் பார்த்தால், ஆச்சரியம் மட்டுமல்ல, திகைப்பும் ஏற்படும். அதனால்தான், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பீகாரின் மேற்கு சம்பரானில் உள்ள முதியவர் ஒருவர் தனது பேரன் பிறந்ததைக் கொண்டாட விருந்தில் மதுபாட்டில்களுடன் நடனமாடுவது ஆச்சரியம் அளிக்கும் விஷயமில்லை. 

ஆனால் அந்த வீடியோ வைரலானதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். , 60 வயதான ரமேஷ் சிங், ஷிகர்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சைத்பூர் கிராமத்தில் தனது பேரன் பிறந்ததைக் கொண்டாட ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் இசைக்குழு ஒன்றும் வந்தது.

கையில் பாட்டிலுடன் நடனமாடிய தாத்தா 
இந்த நிகழ்ச்சியில், 'ஷாராபி' படத்தின் ஒரு பாடலுக்கு பெண் நடனக் கலைஞர் நடனமாடினார்.. பாடலைக் கேட்ட தாத்தாவால் உற்சாகத்தை அடக்க முடியவில்லை. கையில் காலி பாட்டிலுடன் மேடையில் நடனமாடத் தொடங்கினார்.

அதை மக்கள் மிகவும் ரசித்தனர், தாத்தாவை பார்த்து, நடனப் பெண் ஆடும் ஆட்டம் அருமையாக இருந்தது. அந்த ரசனையான நடனத்தை, வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பகிரப்பட்ட உடனேயே வைரலானது. இந்த வீடியோ வைரலாக (Viral Video) பரவியதும் போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.

ALSO READ | தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்
 
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ 
மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ரமேஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஷிகர்பூரின் SHO அஜய் குமார் திங்கள்கிழமையன்று (2022, ஜனவரி 31) தெரிவித்தார். 

பிறந்தநாள் கொண்டாட்ட விருந்து ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்றது.  சரி, விருந்தில் நடனமாடுவது தப்பா? என்ற கேள்வி எழலாம். 

இந்த நிகழ்ச்சியில் கொரோனா நெறிமுறைகள் மீறப்பட்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது.  பீகாரில் மதுத்தடை இருப்பதால், ம்து பாட்டிலுடன் நடனமாடிய தாத்தா கைது செய்யப்பட்டார். 

உண்மையில், அவர், கையில் இருந்தது காலி பாட்டில் தானாம்! ஆனால், தாத்தா மது அருந்தினாரா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் வைரல் செய்தி.

இந்த விவகாரத்தில் தற்போது போலீசார் முழு விசாரணை நடத்தி வருகின்றனர். கையில் இருந்தது காலி பாட்டிலா என்பதுதான் தாத்தாவின் ரிலீசுக்கு வழிவகுக்குமாம்!

ALSO READ | பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News