திமுக ஆட்சியில் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி..!
DMK ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் MK. ஸ்டாலின் (MK Stalin) வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், DMK ஆட்சியில் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு (TN Assembly election) இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, சசிகலா (Sasikala) விடுதலை என அரசியல் களம் பரபரப்பாக இருந்து வரும் சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஒவ்வொரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
‘மக்கள் கிராம சபை கூட்டம்’ என்ற தலைப்பில் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்திருக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK Stalin) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ (Ungal Thoguthiyil Stalin) என்ற தலைப்பில் நேற்று முதல் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். DMK பதவியேற்றவுடன் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியுடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
ALSO READ | சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறப்பு..!
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்., "ஜெயலலிதா (Jayalalithaa) மரணத்திற்கான காரணத்தை AIADMK கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தேர்தலில் திமுக ஜெயித்துவிடும் என்பதால் டெபாசிட்டையாவது பெறவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்தை திறந்து அதிமுக நாடகம் நடத்துகிறது" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் MK. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், DMK ஆட்சியில் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR