விரைவில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் -சித்தராமையா உறுதி!

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

Written by - Mukesh M | Last Updated : Nov 7, 2019, 08:58 AM IST
  • ஒருவேளை JD(S), பாஜகவுடன் கைகோர்த்தால், மதச்சார்பற்ற கட்சி என்ற அதன் கூற்றுக்கள் அம்பலப்படுத்தப்படும்.
  • பெரும்பான்மைக்கு தேவையான எட்டு இடங்களை பாஜக வெல்ல முடியாது...
விரைவில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் -சித்தராமையா உறுதி! title=

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா புதன்கிழமை சட்டமன்றத் தேர்தல் "தவிர்க்க முடியாதது" என்று கூறியது, வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் எளிய பெரும்பான்மைக்கு தேவையான எட்டு இடங்களை பாஜக வெல்ல முடியாது என குறிப்பதாக தெரிகிறது. மேலும் தான் புதிய சட்டமன்றத்திற்கு ஆவலாக காத்திருக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா வெளியிட்ட அறிக்கையில்., முன்னாள் முதல்வர் சித்தராமையா புதிய தேர்தல்களுக்கு அவசரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தேவேகவுடாவின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக சித்தராமையா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். 

கர்நாடகாவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தன் மீது முன்னாள் பிரதமர் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சித்தராமையா தெரிவிக்கையில்., "பாஜக குறைந்தபட்சம் எட்டு இடங்களை வெல்லத் தவறும் என்று நான் கூறியிருந்தேன். அதேவேளையில் காங்கிரஸ் குறைந்தது 12 இடங்களை வெல்லும், இத்தகைய சூழ்நிலை உண்டாகும் பட்சத்தில், அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும், புதிய தேர்தல்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்,” என்றே கூறியிருந்தேன் என தெளிவுபடுத்தினார்.

மேலும் புதிய தேர்தல்களுக்கு எந்த அவசரமும் இல்லை, எடியூரப்பா ஆட்சியை கவிழ்க்க வெளி சக்திகள் ஏதும் தேவையில்லை, பாஜக-வுக்குள் உள்ளவர்களே எடியூரப்பாவிற்கு எதிராக சதி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

திரு. தேவேகவுடா மற்றும் திரு. எடியுரப்பா "ஒருவருக்கொருவர் சாடுதல்" குறித்து உடுப்பியில் பேசிய சித்தராமையா, பாஜக-வுக்கும் ஜனதா தளத்திற்கும் இடையிலான இந்த "உள் ஒப்பந்தத்தின்" விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி தனக்குத் தெரியாது என்று தெரிவித்தார். "ஒருவேளை JD(S), பாஜகவுடன் கைகோர்த்தால், மதச்சார்பற்ற கட்சி என்ற அதன் கூற்றுக்கள் அம்பலப்படுத்தப்படும். அவர்கள் உண்மையில் மதச்சார்பற்றவர்களாக இருந்தால், அவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்,” எனவும் அவர் தெரிவித்தார்.

Trending News