சென்னை: தமிழக அரசில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் I சேவைகள், வனப் பயிற்சியாளர், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கான TNPSC ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் மற்றும் அது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். விவரங்களை நன்றாக தெரிந்துக் கொண்டு, அவற்றை சரிபார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அறிவிக்கை வெளியாகி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், விவரங்களை சரிபார்த்து விரைவில் விண்ணப்பிக்கவும்.
குரூப் IV, நிர்வாக அதிகாரி, கள ஆய்வாளர், வரைவாளர், கணக்கு அதிகாரி, வனப் பயிற்சியாளர், சிவில் சர்வீசஸ் மற்றும் பிற தேர்வுகளுக்கான அனைத்து சமீபத்திய TNPSC ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்புகளையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்
TNPSC ஆட்சேர்ப்பு 2022 Forest Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2022 என்றும், TNPSC ஆட்சேர்ப்பு 2022 கள ஆய்வாளர், வரைவாளர் மற்றும் பிற பதவிகளுக்கான கடைசி தேதி 27.08.2022 ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) TNPSC ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு, தகுதி அளவுகோல்கள், கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் TNPSC வனப் பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2022 தொடர்பான பிற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
NPSC Forest Apprentice Recruitment 2022க்கான காலியிட விவரங்கள்:
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் TNPSC வனப் பயிற்சியாளர் பதவிகளுக்கு 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க | இஸ்ரோவில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு! விவரம் உள்ளே
TNPSC வன அப்ரண்டிஸ் பதவிகளுக்கான தகுதி / கல்வித் தகுதி
(அ) வனவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது (ஆ) கீழ்க்கண்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்:.
1. விவசாயம் 2 கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் 3. தாவரவியல் 4. வேதியியல் 5. கணினி பயன்பாடுகள்/கணினி அறிவியல் 6. பொறியியல் (வேளாண் பொறியியல் உட்பட அனைத்து பொறியியல் பாடங்களும்) 7. சுற்றுச்சூழல் அறிவியல் 8. புவியியல் 9. தோட்டக்கலை 10. கடல் உயிரியல் 11. 13. புள்ளியியல் 14. வனவிலங்கு உயிரியல் 15. விலங்கியல்
மேலும் படிக்க | மருந்தாளுநர் பணிக்கான வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்
TNPSC கள ஆய்வாளர், வரைவாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கான வயது வரம்பு
TNPSC Forest Apprentice பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள். பல்வேறு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு, மாநில அரசு விதிகளின்படி இருக்கும்.
TNPSC வன பயிற்சிக்கான தேர்வு செயல்முறை
(i) எழுத்துத் தேர்வு (ii) உடல் தேர்வு மற்றும் (iii) நேர்க்கணல் தேர்வு ஆகிய மூன்று தொடர்ச்சியான நிலைகளில் தேர்வு செய்யப்படும்.
TNPSC வனப் பயிற்சியாளர் ஆட்சேர்ப்பு 2022க்கான விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ. 150/- பதிவுக் கட்டணமாகவும், ரூ. 150/- தேர்வுக் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும், SC / ST / MBC / DC / BC / ExM / PwBD மற்றும் ஆதரவற்ற கைம்பெண்கள் வகை விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ