Reservation: இனி மருத்துவப் படிப்பிலும் EWS இடஒதுக்கீடு

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2021, 05:12 PM IST
  • பொருளாதார ரீதியாக பிந்தங்கிய, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு வழக்கு மேல்முறையீடு வழக்கு
  • இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து
Reservation: இனி மருத்துவப் படிப்பிலும் EWS இடஒதுக்கீடு title=

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

முன்னதாக, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்திருந்தனர்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 Also Read | மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்ற ஒப்புதலுடன் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. 

Also Read | கண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News