புதுடெல்லி டெல்லி பல்கலை., கரோரி மால் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
உத்திர பிரதேச மாநிலம் பிஹாரை சேர்ந்த மாணவர் தயால் சிங்-னை பணம் கேட்டு தொந்தரவு படுத்திய சக மாணவர்கள், தயால் அவர்களுக்கு பணம் கொடுக்காததால் சக மாணவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
#WATCH: A student beaten up by group of students in Delhi University's Kirori Mal College. The student says 'They used to ask me for money & target me saying 'Tum UP-Bihar ke ho yahan tumhari nahi chalti'. When I complained to the police, they didn't take me seriously' (15.03.18) pic.twitter.com/49NidXaZbn
— ANI (@ANI) April 11, 2018
கடந்த மார்ச்15-ஆம் நடைப்பெற்ற இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தயால் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் தற்போது விஷயம் வெளிவந்துள்ளது.
புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... தான் பட்டியல் இனத்தவர் என்பதால் தன்னை சக மாணவர்கள் தொடர்சியாக துன்புறுத்திவந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று சக மாணவர்கள் தன்னை கொடூரமாக தாக்கினர். தாக்கும் போது "நீ பிஹாரை சேர்ந்தவன், உன் குரலை இங்கு யாரும் கேட்க வரமாட்டார்களெ" என்று கூறி தாக்கினர் என குறிப்பிடுள்ளார்.
இந்த தாக்குதலில் இவருக்கு ஏற்பட்ட காயத்தால் 14 தையல்களை தயாலுக்கு போடப்பட்டுள்ளது.
அமிதாப் பட்சன், சித்தார்த் போன்ற பிரபலங்கள் படித்த இந்த கல்லூரியில், இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 23 வயது இளம்பெண் ஒருவரை இதே கல்லூரியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.