டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 100 iPhone-களை கடத்த முயன்ற நபரை விமான நிலைய காவல்துறை கைது செய்துள்ளது!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.85,61,169 மதிப்புள்ள Apple iPhone X போன்களை கடத்த முயன்றாக கூறி 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அவர் துபாயில் இருந்து டெல்லி வந்ததாக தெரிகிறது. இந்த கடத்தல் விவகாரம் தொடர்பாக முன்னதாக காவல்துறைக்கு தகவல் தெரிந்ததாகவும், அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரினை காவல்துறையினர் கைது செய்ததாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து சுங்க துறை அதிகாரி அமன்தீப் சிங் தெரிவிக்கையில்... கைது செய்யப்பட்டவரின் வசம் இருந்து 100 iPhone X கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் விலை சுமார் 85.61 லட்சம் ரூபாய் என மதிப்பிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!