Raksha Bandhan:சகோதர சகோதரிகளை பாசக் கயிற்றால் பிணைக்கும் ரக்‌ஷா பந்தனின் சிறப்பு...

ரக்ஷா பந்தன் என்பது, இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகை. சகோதரனுக்கு ராக்கி சகோதரி கட்டும் இந்த பண்டிகை சமுதாயப் பண்டிகை....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 3, 2020, 06:28 AM IST
Raksha Bandhan:சகோதர சகோதரிகளை பாசக் கயிற்றால் பிணைக்கும் ரக்‌ஷா பந்தனின் சிறப்பு... title=

புதுடெல்லி: ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும் வட இந்தியர்க்ளால் கொண்டாடப்படும் இந்த பண்டிகை, சகோதரன் மற்றும் சகோதரிக்கு இடையில் பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதாகும்.

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் கயிறு கட்டி தங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்துவார்கள்.

ராக்கி அதாவது தனது கை மணிக்கட்டில் கயிறு கட்டிய பெண்ணின் உடன் பிறந்தவனாக இருந்து அனைத்து சுக துக்கங்களிலும் உடனிருந்து பாதுகாப்பேன் என்று ராக்கி கட்டிக் கொண்ட ஆண் உறுதி கூறுவார். இதனால், ரக்ஷா பந்தனை மதப் பண்டிகை என்று சொல்வதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

முந்தைய காலத்தில் மஞ்சள் நூல் கட்டுவது தான் ரக்ஷா பந்தனின் அடிப்படையாக இருந்தது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு தனது சக்திக்கு ஏற்பட பரிசு கொடுப்பார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இன்று வட இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை என தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ரக்‌ஷா பந்தன் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் பரவி அனைவரின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, மக்களை வீட்டுக்குள் இருக்க கட்டாயப்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த ஆண்டு கோலகல கொண்டாட்டம் என்பது இருக்காது என்றே தோன்றுகிறது. வைரஸிடம் இருந்து பாதுகாக்க முகத்தில் முகக்கவசங்களை பயன்படுத்தும் வேளையில், வந்திருக்கும் முதல் ரக்‌ஷா பந்தன் பண்டிகை இது.  இந்த காப்புக் கயிறு, கொரோனாவை காக்குமா? அல்லது அதிக அளவில் மக்கள் கூடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்களா என்பது அச்சத்தைத் தருகிறது.

மகாபாரதத்தில் திரௌபதி, கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் வடிவதைப் பார்த்து பதறிப்போய் தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணரின் கையில் கட்டினார். பாசத்தால் நெகிழ்ந்த கிருஷ்ணர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாப்பதாக திரெளபதிக்கு உறுதியளித்தார். 
அதன் அடிப்படையில் தான் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று, அரசவையில் பாஞ்சாலியின் ஆடை களையப்பட்டபோது, கிருஷ்ணர் ஆடை கொடுத்து திரௌபதியின் மானத்தை காப்பாற்றினார்.

அதற்கு முன்னதாக ஒரு சந்தரப்பத்தில் கிருஷ்ணருக்கு காயம் ஏற்பட்டிருந்தபோது, அதைப் பார்த்த பாஞ்சாலி பதைத்துப் போய், தனது புடவையின் ஒரு பகுதியை கிழித்துக் கட்டி பாசத்தைக் காட்டினார்.  அதைப் பார்த்து நெகிழ்ந்த கிருஷ்ணர் பாஞ்சாலியை தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டு, வாழ்வில் அனைத்து துன்பங்களிலும் துணையிருப்பேன் என்று கூறினார்.  அதன்பிறகு, சகோதர-சகோதரிகளின் பாசத்தை குறிக்கும் பண்டிகையாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

Read Also | China boycott: ரக்ஷாபந்தன் பண்டிகையில் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா...

ஒரு பெண்ணின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி வாழ்நாள் முழுவதும் உன்னை காக்கிறேன் என்று ஒரு ஆண் உறுதிமொழி ஏற்கிறான்.  ரக்‌ஷா பந்தன் பண்டிகையிலோ, ஒரு பெண், ஆண் ஒருவரின் கையில் ராக்கியைக் கட்டியதும், அந்த ரக்‌ஷையை அதாவது கயிறை பாசக் கயிறாக ஏற்கும் ஆண், வாழ்நாள் முழுவதும் சகோதரனாக துணை நின்று உன்னை காப்பாற்றுவேன் என்று உறுதியளிக்கிறான்.

இந்திய பண்பாட்டில் உறவுகளும், கடமைகளும் பாசக் கயிற்றால், பண்பாடு என்னும் ரக்‌ஷையால் காக்கப்படுகிறது. ரக்‌ஷா பந்தனின் கட்டும் ராக்கி என்னும் அந்தக் கயிறானது தற்போது வெறும் மஞ்சள் கயிறு என்ற நிலையில் நின்றுவிடவில்லை. தங்கக்கயிறு, வெள்ளிக் கயிறு, வைர ராக்கி என பாதுகாப்புக்கு உறுதிமொழி கொடுக்கும் ராக்கியும் பல பரிணாமங்களை எடுத்துவிட்டது.

சீனாவில் இருந்து ஆண்டுதோறும் பெருமளவில் ராக்கிக் கயிறுகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.  இந்த ஆண்டு ஆத்மநிர்பர் இந்தியா, Made in India  என்ற கொள்கையின் அடிப்படையில் உள்ளூரிலேயே ராக்கி தயாரிக்கும் தொழில் சூடு பிடித்திருப்பதால், இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் பண்டிகை தொழில்களை உள்ளூர் மட்டத்தில் பாதுகாக்கும் ஒரு பண்டிகையாகவும் மலர்ந்திருக்கிறது.

Trending News