புதுடெல்லி: மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி முதல் அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். அதாவது பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் கொடுக்க மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் ஸ்ரார்த்தம் செய்தால், அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் (திதி) கொடுத்த பலன் வந்து சேரும்.
நமது பித்ருக்களுக்கு மஹாளய பக்ஷத்தில் ஸ்ரார்த்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்:
ஸ்நானம் செய்து நித்ய பூஜைக்கு பிறகு சாயங்காலத்திற்கு முன்பு, நான்கு இலைகளில் சாப்பாடு வைக்கவும். ஒன்று விஸ்ணுவுக்கு இரண்டாவது பித்ருக்களுக்கு மூன்றாவது வைவானரருக்கு நான்காவது காகத்திற்கு.
கையில் தீர்த்தம் எடுத்து கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி சங்கல்பம் செய்யவும்:-
"கல்ப தேவ கூர்வீத சமயே ஸ்ரார்த்தம் குலே கஸ்ச்சின்ன சீததி
ஆயு: புத்ரான் யஷ: ஸ்வர்கம் கீர்தீம் புஷ்டீம் பலம் ஸ்ரீயம்
பசுன் சௌக்கியம் தனம் தான்யம் ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்
தேவ கார்யாதபி சதா பித்ருகார்யம் விஷிஷ்யதே
தேவதாப்ய: பித்ரூணாம் ஹி பூர்வ மாப்யாயனம் சுபம்" !!
இப்போது கைகுப்பி கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி பித்ருக்களை ஆவாஹனம் செய்யவும்:-
"ஆஹா தேவோ பித்ரும் சம்தாத் ஆவாஹயாமி ஆவாஹயாமி ஆவாஹிதா !
பித்ரேஸ்வர: பூஜிதாஸ்சய ப்ரசன்னோ பவ ஸர்வதா" !!
இதன் பிறகு கீழ் கண்ட தியான மந்திரத்தை சொல்லி எள்ளுடன் தண்ணீரை சமர்ப்பிக்கவும்:-
"ஸ்வஸரீரம் தேஜோமயம் புண்யாத்மகம் புருஷார்த்த சாதனம் பித்ரேஸ்வராராதன யோக்யம் த்யாத்வா தஸ்மின் சரீர சர்வாத்மகம் சர்வக்ய சர்வ சக்தி சமன்விதம்
பிதரெஸ்ராமயம் ஆனந்த ஸ்வரூபம் பாவயேத்"
இதன் பிறகு மீண்டும் கையில் எள்ளும் தண்ணீரும் எடுத்து கொண்டு கீழ் கண்ட ஒவ்வொரு மந்திரங்களை சொல்ல வேண்டும்:-
"ஓம் கவ்யாத த்ருப்யதாமிதம் திலோதகம் தஸ்மை ஸ்வதா
ஓம் யமஸ்த்ருப்யதாமிதம் திலோதகம் தஸ்மை ஸ்வதா
ஓம் அர்யமா-த்ருப்யதாமிதம் திலோதகம் தஸ்மை ஸ்வதா
ஓம் ஸோமபாஸ்த்ருப்யதாமிதம் திலோதகம் தேப்ய: ஸ்வதா
ஓம் பர்ஹிஷதஸ்த்ருப்யதாமிதம் திலோதகம் தேப்ய: ஸ்வதா"
இப்போ கீழ் கண்ட மந்திரத்தை 11 முறை சொல்லவும்:
"ஓம் சர்வ பித்ரு ப்ரம் ப்ரசன்னோ பவ ஓம்"
இப்போ கீழ் கண்ட மந்திரத்தை சொல்லவும் :
"ஓம் நாப்யாஆசிதந்தரிக்ஷ சீர்ஸ்னோ த்யோ: சமவர்தத
பத்பயாம் பூமிர்திஷ: ப்ரம்மஹவி: பிரம்மக்னோ பிரம்மனா ஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம் பிரம்மகர்ம சமாதினா"
5 முறை உத்தரணியில் தண்ணீரை கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி தரையில் விடவும்:
ஓம் பிராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் சமானாய ஸ்வாஹா
இப்போ கீழ் கண்ட மந்திரத்தை 3 முறை சொல்லவும்:
ஓம் நமோ வ: பிதரோ ரசாய, நமோ வ: பிதர: சோஷாய
நமோ வ: பிதர: ஜீவாய நமோ வ: பிதர: ஸ்வதாயை,
நமோ வ: பிதர: கோராய, நமோ வ: பிதர: மன்யவே,
நமோ வ: பிதர: பிதரோ, நமோ வோ க்ருஹான்ன:
பிதரோ தத்தஸத்தோ வ: பிதரோ த்வேஸ்ம:" !!
இவ்வாறு பிரார்த்தனை செய்த பிறகு நமஸ்காரம் செய்யவும் விஷ்ணுவின் இலையை எல்லோரும் சாப்பிடலாம். பித்ருக்களின் இலையை வீட்டார் மட்டுமே சாப்பிடவும். வைஸ்வானரரின் இலையை காகத்திற்கு வைக்கவும். நாங்காவது இலையை நாய்களுக்கு அல்லது பசுமாட்டிற்கு வைக்கவும்.
இவ்வாறு பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்யவும். இதனால் பித்ருக்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.
(தகவல்: சுவாமிநாதன் சாஸ்த்ரி - S.M. Swaminathan Shastri)