அபிஷேகம், மகா அபிஷேகம் என்ற வார்த்தைகளைக் கேட்டிருக்கலாம். அபிஷேகத்திற்குக்ம், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடி என்ன? தெரிந்துக் கொள்வோம்.
மும்மூர்த்திகளில் விஷ்ணு அலங்கார பிரியன் என்றால், சிவன் அபிஷேகப் பிரியர். தனது தலையிலேயே கங்கையைச் சூடிக் கொண்டு, எக்கணமும், கங்கை நீரால் அபிஷேகம் செய்துக் கொள்ளும் எம்பெருமானுக்கு ஆலயங்களில் அபிஷேகம் செய்து வாழ்வில் அனைத்து நலங்களும் பெறலாம்.
மாசி மாதம் மகம் நட்சத்திர நாளன்று பவுர்ணமி வரும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும் மாசி மாத பவுர்ணமியில் இறைவனை வணங்கினால் அனைத்து பாவங்களும் போய் வினைகள் அறுத்து வீடுபேறு பெறலாம் என்பது முன்னோர் வாக்கு.
Also Read : Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஆலயங்கள் அனைத்திலும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். புனிதத் தலங்களில் நீராடி சிவனை தரிசிப்பது வீடு பேற்றை அருளும்.
சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒன்று நடராஜ மூர்த்தி வடிவம். சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜ மூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே மாசி மகத்தன்று சிவபெருமானுக்கு ஆறு கால அபிஷேகங்களும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
Also Read | பெளர்ணமி தினத்தின் முக்கியத்துவம் என்ன?
சாதாரண அபிஷேகத்திலிருந்து மகா அபிஷேகம் அளவில் மாறுபட்டது. பிரமாண்டமானது. மகா அபிஷேகத்துக்கு சுமார் 50,000 லிட்டர் திரவியங்கள் பயன்படுத்தப்படும். மகா அபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும்.
சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் கனக சபையில் தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கனகசபையில் நடைபெறும் இந்த அபிஷேகத்தை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும். நம் துன்பங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
மாசி மாத சதுர்த்தசியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசனம் செய்து நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.
Also Read | எம்பெருமான் சிவனை பசுக்கள் வணங்கிய தலங்கள் எவை தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR