தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராக்கு எதிரான மனு தள்ளுபடி!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்க தீர்மானத்தை நிராகரித்த துணை ஜனாதிபயை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. 

Last Updated : May 8, 2018, 01:00 PM IST
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராக்கு எதிரான மனு தள்ளுபடி! title=

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்க தீர்மானத்தை நிராகரித்த துணை ஜனாதிபயை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது. 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கொடுத்த தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். ‘தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கக் கூடியதாகவோ அல்லது ஏற்கக் கூடியதாகவோ இல்லை’ என்று தனது உத்தரவில் அவர் கூறியிருந்தார்

இதற்க்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதாப் சிங், மற்றும் அமீ ஹர்ஷத்ராய் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சான பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது, மனுவை திரும்ப பெற்று கொள்வதாக கபில் சிபல் கூறியதை தொடர்ந்து, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Trending News