பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் ராகுல் காந்தி கர்நாடகாவின் ககினேலில் உள்ள கனக குருபெட்டாவிற்கு சென்றனர்!
வரும் மே மாதம் 12-ஆம் நாள் கர்நாடக மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகா சென்றார்.
தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சிவமொக்காவுக்கு சென்றார். இந்த இரண்டு நாட்களில் கர்நாடகத்தின் பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களை சந்திக்கும் அவர் இப்பயணத்திற்கு இடையில் இன்று மாலை கர்நாடகாவின் ககினேலில் உள்ள கனக குருபெட்டாவிற்கு சென்றனர்.
இந்நிகழ்வின் போது கர்நாட முதல்வர் சித்தராமையாவும் அவருடன் இருந்தார்.
Davanagere: Congress president Rahul Gandhi & CM Siddaramaiah visited Kanaka Gurupeta at Kaginele. #Karnataka pic.twitter.com/s7uhl5bZWs
— ANI (@ANI) April 3, 2018
கர்நாடகா தேர்தல் 2018...
- வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17
- வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24
- கர்நாடக தேர்தல் - மே 12, 2018
- வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018
- 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.